அவள் புன்னகையில் பூக்கள் சிரிக்கின்றன

பூச்சூடி அவள் வரவில்லை
அவள் புன்னகையில் பூக்கள் சிரிக்கின்றன !
கொலுசு அவள் அணியவில்லை
கவிதை வரிகள் அவள் காலடி ஓசைக்காக காத்திருக்கின்றன !
அந்திகவியும் அழகிய வேளையில் இன்று அவள் வரவில்லை
அவள்நினைவுகள் தூரிகையாகி நெஞ்சிலாயிரம் ஓவியங்கள் தீட்டுகின்றன !

எழுதியவர் : கவின் சாரலன் (14-Apr-20, 11:35 am)
பார்வை : 146

மேலே