புத்தாண்டு வாழ்த்து

புத்தாண்டு வாழ்த்து

கண்ணுக்குத் தெரியாத.
கயவனின் சூழ்ச்சியால்
இருக்கும் இடத்திலேயே
இல்லறக்கைதியாய் நாங்கள்...

ஆண்டவனின் ஆலயத்தில்
ஆறு கால பூஜை செய்து
ஆனந்தமாய் வரவேற்க
வழியில்லை எங்களுக்கு…

புத்தாடை கட்டிகிட்டு
மத்தாப்பு கொளுத்தி கிட்டு
புத்தாண்டை வரவேற்க..
வழி இல்லை எங்களுக்கு…

புத்தாண்டே..

ஊரடங்கிபோன பின்னும்
ஊர் ஊராய் சுற்றிவரும்
கிருமிதனை அழிக்க வரும்
ஆண்டவனாய்
பிறந்து விடு......


நித்தம் நித்தம் நித்திரையின்றி
வெளியில் செல்லும் உத்தரவின்றி
நகர்ந்து செல்லும் நாட்களை மாற்றும்
சித்திரைப் பூவே
மலர்ந்துவிடு…..

சாதனை புரியும் சாகச மனிதனை
முடக்கி வைத்திடும் சக்தி அனைத்தையும்
முகவரி இன்றி முழுதாய் அழித்திட
சார்வரி ஆண்டே
வந்துவிடு…

மாறிப்போன மனிதர்கள் எல்லாம்
ஊறிப்போன தமிழனின் பண்பை
உணரச் செய்யும் உன்னத நாளாய்
தோழமை கொண்டு
தோன்றி விடு…

எழுதியவர் : பானுப்பிரியா (14-Apr-20, 11:31 am)
சேர்த்தது : செ பானுப்ரியா
Tanglish : puthandu vaazthu
பார்வை : 3462

மேலே