உன் விழிகளில் துயிலெழுந்ததேனோ
வீணையில் உறங்கிக் கொண்டிருந்த ராகம்
உன் விழிகளில் துயிலெழுந்ததேனோ ?
மலரில் தேனுடன் அமர்ந்திருந்த மௌனம்
உன் இதழில் இடம் மாறியதேனோ ?
உறங்கிக் கொண்டிருந்த என்னிரவுத் துயிலில் உன் வருகை
என் கவிதை வரிகளை ஓவியமாக்கியதேனோ !