தாய்த்தமிழ்

உணர்வே உயிரே
உள்ளம் நிறைந்தவளே
உணர்வு பல கொண்டவளே
நீ வாழ்க பல்லாண்டு

குருதியினில் கலந்தே
குனம் பல உறைத்தாய்

தேன்சுவை கொண்டே
நற்கருத்தையும் விதைத்தாய்

ஞானத்திலே பல நானம்
அண்டத்திற்கே உறைத்தவளே
கானல் நீரென மறையாது
கரும்புச்சாறென தித்திக்கும்
தனித்தன்மை உடையவளே

என்றும் உன் மகனாய்
உன் தொண்டனாய்
உன் போதனைகளை
மனதில் பதித்தவனாய்
என்றும் உன்புகழ் பாடி
என்னுயிர் பிறிய விரும்புகிறேன்
நீ வாழ்க பல்லாண்டு
என் தமிழ்த்தாயே.....

எழுத்து சே.இனியன்

எழுதியவர் : சே.இனியன் (14-Apr-20, 10:39 am)
சேர்த்தது : இனியன்
பார்வை : 108

மேலே