அவளும் மாவும்

சித்திரையில் என் வீட்டு மாமரம்
கிளையெல்லாம் காயால் மறைக்க
மரத்தின் மேலாடையாய் பச்சை
மாவிலைகள் காய்களை போர்த்திட
காய்கள் சிலவோ அதையும் மீறி
எழிலாய்க் காட்சி தர.....
இலை நங்கை அதோ போகின்றாள்
அழகே அழகாய் நடப்பதுபோல
அவள் மேலாடை காற்றில் கொஞ்சம் ஆட
போர்த்திய எழில் கொஞ்சம் மீறி ஆட
இயற்கையை நான் ரசித்தேன் மாமரமாய்
கொஞ்சும் அந்த எழில் அரசியாயும்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (14-Apr-20, 12:03 pm)
பார்வை : 82

மேலே