முகமூடி உலகம்

குறுந்தாடி நீவிடும் நெடுந்தாடி
கறுந்தாடி வெண்தாடி
ஸ்டைலிஷ் பிரென்ச் தாடி
ஃ பாரின் தாடி என்று
பலதாடிகளுடன் உலவும் மனிதர்களே
முகமூடி அணிவதை மறப்பதேனோ ?

வீசும் தென்றல் குளுமைதான்
மனதிற்கு இனிமைதான்
காதல் கவிதைக்கும் உதவிதான்
மூச்சுத் துளையில் தென்றலுடன்
வில்லி கொரோனாவும் நுழைந்துவிட்டால்
பாடிக்கு கேடன்றோ தாடியரே !

ஆடி அசைந்து வண்ண வண்ண ஆடைகளில்
வீதி உலாவரும் அழகுப் பெண்களே
தாடி உங்களுக்கு இல்லை என்றாலும்
மென்மலர் பாடி உங்களதன்றோ
ஆதலினால் தாடியருக்கு சொன்ன
அறிவுரைதான் உங்களுக்கும் !

எழுதியவர் : கவின் சாரலன் (3-Apr-20, 1:07 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
Tanglish : mugamoodi ulakam
பார்வை : 68

மேலே