கொரோனாவுக்கு என் கேள்விகள்

கொரோனாவுக்கு என் கேள்விகள் ?

சீனர்களால் உருவான கொரோனாவா ?
இல்லை
உலகையே மயானம் ஆக்க வந்த கொரோனாவா ?

ஊரடங்கு (உலகத்தையும்) ஏற்படுத்த வந்த கொரோனாவா ?
இல்லை
உலகத்தையே அடக்கிட வந்த கொரோனாவா ?

உலகத்தை இணைக்க வந்த கொரோனாவா ?
இல்லை
உலகத்தை அழிக்க வந்த கொரோனாவா ?

மனிதநேயத்தை வெளிப்படுத்த வந்த கொரோனாவா ?
இல்லை
மனிதனுக்கு நோயை ஏற்படுத்த வந்த கொரோனாவா ?
இல்லை
பாசமில்லா மனிதனுக்கும் பாசம் ஊட்ட வந்த கொரோனாவா ?

அரசுகளை வேலை வாங்க வந்த கொரோனாவா ?
இல்லை
வேலைகளை (ஒர்க்) இல்லாமல் ஆக்க வந்த கொரோனாவா ?

எமதர்ம ராஜாவுக்கு நீ தான் கிரீடமா ( கொரோனாவா ? )
உன் கோபம் தீர என்ன செய்ய வேண்டும் கொரோனாவே
இனி எந்த ஆண்டு வந்து விடாதே மீண்டும் கொரோனாவே .....

மு.கா.ஷாபி அக்தர்.

எழுதியவர் : மு.கா . ஷாபி அக்தர் (3-Apr-20, 4:02 pm)
சேர்த்தது : மு கா ஷாபி அக்தர்
பார்வை : 281

மேலே