தனித்திருப்போம்
ஆயிரம் பேருக்குமேல்
அடைந்திட்ட நுண்கிருமி
ஆயிரம் வேருக்குமே
அடங்காத நுண்கிருமி...
எம்மை
கடன்காரன் ஆக்கிடவாே
கடல்தாண்டி வந்தாய் நீ...
ஊரில் கூடுவோரை
ஊர்தி ஆக்கி
உலக மெல்லாம் பயணிக்கும்,
திட்டமிட்ட பயணமிதோ...???
சிந்திக்க நேரமில்லை
சிறைபிடிப்போம் நமைநாமே...
கட்டமிட்ட ஜோதிடமும்
கட்டுக்கதை யாகிறதே,
தெய்வங்களும் ஆண்டவரும்
தெருக்களிலே காணவில்லை
ஊரடங்கை ஆதரித்தே
உள்ளிருந்து காக்கிறதோ...???
என்தாயும் கண்டதில்லை
அவள்தாயும் கண்டதில்லை
இதுபோலொரு ஊரடங்கை...
நமை மீட்கும் மாமருந்தை
நானின்று சொல்லட்டுமா...?
"ஒற்றுமையை வேரருத்தே
தனித்திருக்கும் தவம்புரிவோம்...!!!"
நமை மீட்கும் மாமருந்து
தனித்திருத்தல் தானன்றோ...!!!
வேண்டுகோளுடன்,
இரா.செல்வக்குமார்