பிரசவிக்காத கவிதையொன்று ஈன்றெடுத்த முதல் பூ-வித்யா

பிரசவிக்காத கவிதையொன்று ஈன்றெடுத்த முதல் பூ-வித்யா

தகுதியே இல்லாத
எத்தனையோ பெண்கள்
தாயாகி இருக்கிறார்கள்.......!

முயற்சிகள் இல்லாமல்.....
கனவுகள் இல்லாமல்.....
காயங்கள் இல்லாமல்.....
காதல் இல்லாமல்........
உன்னதம் தெரியாமல்.....!
அவர்களின் கேலிப்பேச்சுக்கள்
உயிர் துளைத்த
அந்நாளிலும் நான்
மலடி என்பதே
மேல் என்றேனடா..............!

வாழ்வெல்லாம் புழுக்களும்
பூச்சிகளும் உறிஞ்சி எடுக்க.......
என் வயிற்றிலொரு
புழு பூச்சிக்காக..........
அழுது தொழுதேனடா..........!

கருவறை குடியேறி ஒருமுறை........
கண்கள் பிறந்ததும் ஒருமுறை......
எட்டி உதைத்து ஒருமுறையென.....
பலமுறை வளர்ந்து தேய்ந்தாயடா......!

ஊரெல்லாம் கண் காது
மூக்கு வைத்து பேச....
என் கண்ணே...... உனை எண்ணியே
வாழ்ந்தேன் நானடா........!

பழிசொல்லுக்காக பதுங்கிடவோ
வெதும்பிடவோ இல்லை.......
பார்த்தேன்
கேட்டேன்
அழுதேன்
தொழுதேன்.....
நானும் தாயென
தினம் துதிப்பாடி
களித்தேன்.......!

ஒருநாள்........
உள்ளார்ந்த கையொன்று
எனை இறுக அணைப்பதை
இமைகலெல்லாம் வேர்த்துபோக
உணர்ந்தேன்...........!

உன் தேவைகள்
நானறிவேன்........
நீ உறங்கும் அழகை
பார்த்திருக்க உறங்காது
நேரம் ஒதுக்கி காத்திருப்பேன்.........!

உறக்கத்தின் நடுநடுவே
உன் ஸ்பரிசம் தேடிடுவேன்.......
உன் முனங்கல் கேட்டு
உச்சி முகர்ந்து முத்தமிட்டு
மார்திறந்து பாலூட்டி
என் பசியாற்றுவேன்...........!

உன் மலமும்
சிறுநீரும் வரமென
நான் ஏந்தி......
எச்சில் முத்தங்களில்
சொர்க்கம் வசிப்பேன்.......!

முள் பாதைகளில்
என்னுயிர் விரித்து
நீ நடை பழக
காத்திருப்பேன்...........!

ஒரு கசப்பான உண்மையை
உன் காலடி ஓசைகள்
இவ்வுலகிற்கு சொல்லட்டும்
நானும் தாய் என்பதை.......!

வாழ்க்கையின் தோள்
தட்டிக்கொடுக்க கற்றுக்கொண்டேன்
என்றென்றும் என்னுயிரில்
உன்னை சுமப்பேன்........!

வலியறிந்தவள் நானடா
அம்மா என்றொரு
மழலை சொல் கூறடா......!


===============================================
உண்மையிலே இக்கவி பிறக்கும் போது
நானும் தாய்மை அடைந்ததொரு உணர்வு......!

எழுதியவர் : வித்யா (29-Mar-14, 4:22 pm)
பார்வை : 208

மேலே