ஆதலால் என் காதல் பாடட்டும்

ஆதலால் என் காதல் பாடட்டும் :

அன்பிற்கு காதல் என பொருள் என்றால்
என் காதலை சொல்கிறேன் கேள்,

பிறை கண்டு உள்ளம் உலறல்கள் கொண்டதால் இயற்கையில் காதல் கொண்டேன்,
என் அன்பிற்கு வித்தான நிலவும் என்னோடு கவிப் பாடட்டும்.

நதியோடு என் கொலுசு சினிங்கி சிரித்ததால் நீரோடு காதல் கொண்டேன்,
ஓசையில் வண்ண மீன்களும் என்னோடு கவிப் பாடட்டும்.

எம் பாரதி வரிகளை தேடி திளைத்தேன்
எழுத்தில் நிதமும் உலாவி களித்தேன்
தமிழின் ரசத்தோடு என் உயிரும்
கவிப் பாடட்டும்.

திமிரோடு நேர்மையின்பால் நேசம் கொண்டேன்
ஆக எதிர்மறை வாதிகளின் முதுகெலும்பு உடைத்து என் வார்த்தைகள் பாடட்டும்.

எவன் ஒருவன் என் உள்ளத்தை ஆட்கொண்டானோ
அவன் ஒருவனுக்கே எந்நாளும் என் கன்னித் தமிழ் பாடட்டும்.

புதுமைக்காய் அயலார் உடை உடுத்தவில்லை நெசவுக்கு உயர்வு வேண்டி
என் ஆசைக்காய் சேலையும் பண்பாடு பாடட்டும்.

முறையோடு பயின்றே என் ஞானத்தை வளர்த்தேன்
தமிழ் சொல்லோடு இன்புற்று நித்தம் வளர்ந்தேன்

பூவோடு மணக்கும் நாரின் வாழ்வு, என்
தமிழோடு என் காதல் பாடி மணக்கட்டும் .

எழுதியவர் : தமிழ் ப்ரியா (10-Mar-17, 3:55 pm)
பார்வை : 300

மேலே