sakthic - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : sakthic |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 20-Sep-2012 |
பார்த்தவர்கள் | : 307 |
புள்ளி | : 19 |
இரண்டு காலை இரண்டு மாலை செய்வதறியாமல் விழிக்கின்றேன்
நீ இல்லாத காலை பொழுது, தேனிர் இடைவெளி மதிய வேலை, எப்படிச் செல்லும் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்
பொழுதுபோக்கு அல்ல நீ இல்லாத இந்த பொழுதை கழிப்பது... செய்வதறியாமல் விழிக்கின்றேன் நிமிடங்களை நகர்த்திக்கொண்டே -சக்தி
சமிப காலமாக நகை கடை விளம்பரங்களை அதிகமாக பார்க்க நேரிடுகிறது, எல்லா சேனல்களிலும் நகை கடை விளம்பரங்கள் என்றாலே உங்கள் பெண்களுக்கு நகை வாங்கி விட்டீர்களா இல்லையா ? கல்யாணமே நடக்காது என்பது போல் தான் இருக்கிறது .
விளம்பரம் 1
"மாப்பிள்ளையே அப்படியே வெயிட் பண்ண சொல்லுங்க இதோ வந்துடறேன், அதான் நம்ப கடை இருக்கே அதான் அதே தான் அந்த நகை கடை இருக்கே என்று"
விளம்பரம் 2
"பெண், பெண்கள் என்றாலே டென்ஷன் ல என்று ஆரம்பித்து .பெண்கள் டென்ஷன் இல்லை அவர்களுக்கு நகை சேர்ப்பதில் தான் டென்ஷன் என்று சொல்லி கவலை படாதீங்க, கல்யாண வயதில் பெண்கள் இருக்கா கவலை வேண்டாம். அந்த நகை கடையில் வட்டி இல்லை அது இ
ஒரு இலைகூட தன் உடலை உரமாய் அளித்து அடுத்த சந்ததிக்கு உதவி செய்கிறது ...
நாம் மனிதர்கள் ...உலகில் உள்ள ஜீவன்களில் நாம் தான் சிறந்தவர்கள் ...
மண் தின்ன போகும் உடலை தானம் செய்தால் .,,ஒரு ஜீவன் வாழ்நாள் முழுவதும் மகிழ்சி அடையுமே ? உடல் தானம் ..கண் தானம்..இரத்த தானம் செயுங்கள் ....
கட்டிலில் கணவனின்
கட்டுக்கடங்காத ஆசையால்
கன்னியுடல் கிழிந்து புண்ணாகும் போதும்
இன்முகம் காட்டி சிரிகின்றோமே..
ஆம் நாம் வேஷம் தான் போடுகின்றோம்.
பெற்றோர் உறவின்றி
தனித்திருக்க
உணவிற்கும் உடைக்குமென
துடித்திருக்க
அத்தைக்கும் மாமனுக்கும்
பொங்கிப் போட்டு பூரித்துப் போகின்றோமே
ஆம் நாம் வேஷம் தான் போடுகின்றோம்.
அதிகாலையில்
அடுக்களையில் அவதிப்பட்டு
அந்திசாயும் வரை அலுவலகத்தில்
அல்லல் பட்டு
அம்மா என அணைக்கும் குழந்தைக்கு
முத்தத்தோடு அன்பையும் பொழிகின்றோமே
ஆம் நாம் வேஷம் போடுகின்றோம் .
புதுமை பெண் என்பீர்கள்
புரட்சிப் பெண் என்பீர்கள்
உண்மையில் எங்கள் முகத்திரைய
தாயின் அன்பு பெரியதா?
இல்லை
தாரத்தின் அன்பு பெரியதா?
இன்றைய பட்டி மன்ற கேள்விக்கு பதில் தார வாருங்கள். நமது எழுத்து வாசகர்களே..சீக்கிரம் வாருங்கள்..உங்கள் கருத்துகளை அள்ளி தெளியுங்கள்..
அம்மா என்பதே என் வாதம்..வீட்டு அம்மாவா இல்லை இல்லை என்னை பெற்ற அம்மா.
தொடருங்கள்..
இறைவன் கொடுத்ததை
இருக்கும் போதும் (ரத்த தானம் )
இறந்த பிறகும் (கண் கடமை)
இன்னொருவருக்கு கொடுப்பது நலமே
கண் கடமை செய்வீர்
இருக்கும் போது கொடுப்பதே தானம்
இறந்த பின் கொடுப்பது கடமை
கண்களை கொடுப்பீர்
கடமையை செய்வீர்
பணம் போதும் விலை உள்ள பொருள்களை நேசிக்க
மனம் வேண்டும் விலையில்லா உயிர்களை நேசிக்க
நல்ல மனம் கொண்டுள்ள நண்பர்களுக்காக சக்தி எழுதிகொள்வது
செய்த பிறகே சொல்கிறேன்
கணினியை கவிதையாய் பார்க்கும் கண்கள்
பேனாவை எடுக்க துடிக்கும் கைகள்
வார்த்தைகளை வடிவமைக்க துரத்துகிறது மனது
இதையெல்லாம் செய்ய தடுப்பது இயங்கி கொண்டிருக்கும் என் இதயம் ..
நேரத்தை அடகு வைத்து விட்டாய் அலுவலகத்திற்கு
இனி வார்த்தைகளை கோர்க்க மனதும்,வடிவம் கொடுக்க கையும் ,
கணினியை கவிதையாய் பார்க்கும் கண்களும் காத்திருக்க தான் வேண்டும்,
சிறகில்லாமல் தான் பறக்க வேண்டும்.
ரசனைகள் வார்த்தைகளாய் மாறி கவிதையாய் மலர காத்து கொண்டிருகிறது -அடகு வைத்த நேரத்தில் அலுவலக பனி தொடர்ந்து கொண்டே
தளத்தில் இருக்கும் பல பேர் புத்தகம் வாசிக்கும் பழக்கம் இல்லாதவர்கள் , நான் தவறாக சொல்லவில்லை , இது என்னுடைய கருத்து உங்கள் கருத்தென்ன
எல்லா மௌனங்களும்
சம்மதங்களில்லை.......!
நிராகரிப்புகள் வீரியம்
குறைந்ததொரு ஊமை நிலை.......!