அடகு வைத்த நேரத்தில் அலுவலக பணி

கணினியை கவிதையாய் பார்க்கும் கண்கள்
பேனாவை எடுக்க துடிக்கும் கைகள்
வார்த்தைகளை வடிவமைக்க துரத்துகிறது மனது
இதையெல்லாம் செய்ய தடுப்பது இயங்கி கொண்டிருக்கும் என் இதயம் ..
நேரத்தை அடகு வைத்து விட்டாய் அலுவலகத்திற்கு
இனி வார்த்தைகளை கோர்க்க மனதும்,வடிவம் கொடுக்க கையும் ,
கணினியை கவிதையாய் பார்க்கும் கண்களும் காத்திருக்க தான் வேண்டும்,
சிறகில்லாமல் தான் பறக்க வேண்டும்.
ரசனைகள் வார்த்தைகளாய் மாறி கவிதையாய் மலர காத்து கொண்டிருகிறது -அடகு வைத்த நேரத்தில் அலுவலக பனி தொடர்ந்து கொண்டே

எழுதியவர் : சக்தி (8-Jul-14, 7:36 pm)
பார்வை : 336

மேலே