எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வணக்கம் நண்பர்களே..!திருப்பூரில் # வாசகசாலை வழங்கும் ‘ இலக்கிய...

  வணக்கம் நண்பர்களே..!திருப்பூரில் #வாசகசாலை வழங்கும் ‘ இலக்கிய சந்திப்பு’ மாதாந்திர தொடர் கலந்துரையாடல் நிகழ்வுகள். நிகழ்வு 6-க்கான அழைப்பிதழ். 

இம்முறை நாம் கலந்துரையாடலுக்கு எடுத்துக்கொள்ளும் நாவல், தமிழ் இலக்கியத்தில் மிக முக்கிய படைப்பாக வலம் வந்த எழுத்தாளர் ராஜ் கெளதமனின் “சிலுவைராஜ் சரித்திரம் “ஒரு மனிதனின் முதல் இருபத்தைந்து ஆண்டு கால வாழ்க்கை எத்தகைய முக்கியத்துவமானது என்ற பார்வையில் நாவலில் சிலுவை எனும் கதாபாத்திரம் மூலம் எழுத்தாளர் தன் வாழ்க்கையின் கால் நூற்றாண்டு அனுபவ பகிர்வை சுய வரலாற்றுக் குறிப்புகளாக எழுதினாலும் புறச்சமூக குறிப்புகளையும்... அவர் வாழ்ந்த காலக்கட்டத்தில் மக்களிடையே நிலவிய சாதிகளைப்பற்றிய பார்வையையும் திராவிட இயக்கத்தின் மீது ஒளிர்ந்த நம்பிக்கைகளையும் அது மங்கத்தொடங்கிய விசாரணைகளோடும்... பொதுவுடைமை இயக்கத்திற்கு தென்மாவட்டங்களில் கிடைத்த ஆதரவையும் ஆவணப்படுத்துமளவுக்கு எழுதப்பட்ட நாவல் என்பதோடு.. ஆழ்மன இயல்புகளைப்பற்றிய புரிதலின் பின்னணியிலும் சமுகவியலைப்பற்றிய புரிதலின் பின்னணியிலும் அவ்விடைகளை முன்வைத்துப் பரிசீலனை செய்யவும் முடியும். இத்தகு பரிசீலனைகள் வழியாகவே சாதி என்னும் புனைவை உடைத்துப் பார்க்கமுடியும் என்ற கண்ணோட்டத்தோடு . ஜாதிகள் பற்றிய மேலோட்டமான புரிதலை தெளியவைத்து வாசகனுக்கு புரியவைத்த அளவிலும் இந்நாவல் மிக சிறப்பு பெற்ற நாவலாக எழுதியுள்ளார் என்றளவில் தமிழ் இலக்கியத்தில் முக்கியத்துவமான இடத்தை இந்நாவல் பெற்றிருக்கிறது. 

இந்நாவல் குறித்தான கலந்துரையாடல் நிகழ்வில் நாவல் குறித்தான வாசக பார்வையாக தோழர் ர.பாலசுப்பிரமணியனும்.. மற்றொரு வாசக பார்வையாக கிருத்திகா கார்த்திகேயனும் நம்மிடையே தங்கள் வாசிப்பு அனுபவத்தை பகிர இருக்கிறார்கள் தோழர் கவிஞர் மு.ஆனந்தன் அவர்களும் இந்த நாவல் குறித்தான தனது சிறப்புரையை வழங்க இருக்கிறார்கள்.மேலும், ’சிலுவைராஜ் சரித்திரம்’ நாவலை குறித்து பங்கேற்பாளர்களோடு நாம் கலந்துரையாடவும் இருக்கிறோம் தோழர்களே...!

சிலுவைராஜ் சரித்திரம் நாவலை வாசிக்காத நண்பர்கள் உடனே வாசிக்கத் தொடங்குங்கள். வாசித்தவர்கள் நாவல் குறித்தான உங்கள் சிந்தனையோட்டத்தோடு கலந்துரையாடலுக்கு காத்திருங்கள்.சந்திப்போம்.. ஜூலை 22ம் தேதி. திருப்பூர் குமரன் சாலையிலுள்ள நலம் ஹாலில்.. மாலை 5:30 மணிக்கு:)  

தொடர்புக்கு :9600321289

நாள் : 9-Jul-18, 7:18 pm

மேலே