திருக்குறள் கிறித்துவ நூல் இல்லை 6 4
6 / 4 -இயேசு கிறித்துவின் / கடவுளின் கோபமும் கடுஞ்சொற்களும் !
×× யாதுமறியான் .××
***
பின்னாளில் ,
எகிப்தில் அடிமைப்பட்டுக் கிடந்த இஸ்ரவேலரை, எகிப்தில் இருந்து வெளியேற பார்வோன் அனுமதிக்காத போது, வெகுண்டு எழுந்த இறைவன், பார்வோனிடம் கூறும் படி , மோசேக்கு இவ்வாறு கூறுகிறார் .
" ஆண்டவரும், இஸ்ரயேலரின் கால்நடைகளுக்கும், எகிப்தியரின் கால்நடைகளுக்கும் இடையே வேறுபாடு காட்டுவார். எனவே இஸ்ரயேல் மக்களுக்குரியவை அனைத்திலும் எவையுமே மடிந்துபோகா.
( விடுதலைப் பயணம் 9 : 4 )
அதன்படி எகிப்தியரின் கால்நடைகளெல்லாம் மடிந்தன. இஸ்ரயேல் மக்களின் கால்நடைகளிலோ எதுவும் சாகவில்லை.
( விடுதலைப் பயணம் 9 : 6 )
அதுமட்டுமல்ல . மேலும்,
" பார்வோன் மனமிறுகி எம்மைப் போகவிட மறுத்தபோது, எகிப்து நாட்டிலுள்ள மனிதருள் தலைப்பேறு தொடங்கி கால்நடைகள் தலையீற்று ஈறாக ஆண்தலைப்பிறப்பு அனைத்கையும் ஆண்டவர் சாகடித்தார். எனவே கருப்பை திறக்கும் ஆண்பிறப்பு அனைத்தையும் நான் ஆண்டவருக்குப் பலியிட்டு என் ஆண்பிள்ளைகளுள் தலைபபேறு அனைத்தையும் மீட்கிறேன்' என்று சொல்."
( விடுதலைப் பயணம் 13 : 15 )
கோபத்துடன் எகிப்திய குழந்தைகளையும் கொன்றொழிக்கிறார் கடவுள் .
கடவுள் புதிதாக இஸ்ரவேலர்களைக் குடியேற்றிய நகரிலும் , அந்நிய தெய்வங்களை வழிபட்டால் என்ன செய்ய வேண்டும் எனக் கடவுள் கட்டளையிடுகிறார் பாருங்கள் .
" அப்பொழுது நீங்கள் அந்த நகரின் மக்களைக் கருக்கு வாய்ந்த வாளால் வெட்டுங்கள். அந்நகரிலுள்ள எல்லோரையும் கால்நடைகளையும் வாளுக்கு இரையாக்குங்கள். அதை முற்றிலும் அழித்துவிடுங்கள்.
அந்நகரில் உள்ள பொருள்களை எல்லாம் அதன் நாற்சந்தியில் ஒன்று சேர்த்து நகரையும் பொருள்களையும் தீயால் சுட்டெரித்து உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு எரிபலி ஆக்குங்கள். அந்நகர் ஒரு மேடாக என்றும் இருக்கும். அது மீண்டும் கட்டி எழுப்பப்படாது.
அழிவுக்குரிய அப்பொருள் எதையும் உங்கள் கைதொட வேண்டாம். அதனால் ஆண்டவர் தமது கடுஞ்சினத்திலிருந்து மனம்மாறி, பேரிரக்கம் காட்டுவார். உங்கள் மூதாதையருக்கு அவர் வாக்களித்தபடி உங்களைப் பலுகச் செய்வார். "
( இணைச் சட்டம் 13: 15 - 17 )
பிறிதோர் இடத்தில், கடவுள் தன்னைப் பற்றி இவ்வாறு கூறுகிறார்.
" ஏனெனில், உங்கள் கடவுளாகிய ஆண்டவர் அழிக்கும் நெருப்புப் போன்றவர்; அவர் வேற்றுத் தெய்வ வழிபாட்டைச் சகிக்காத இறைவன்."
( இணைச் சட்டம் 4:24 )
வேற்றினத்தவர்களின் தெய்வத்திற்குப் பணி புரிவதற்காக, கடவுளை விட்டு விலகுவோருக்கு கடவுள் என்ன செய்வார் ?
" ஆண்டவர் அவர்களுக்கு இரக்கம் காட்ட மாட்டார். மாறாக ஆண்டவரின் சினமும் சகிப்பின்மையும் அவர்கள் மீது கனன்றெரியும். இந்த நூலில் எழுதப்பட்டுள்ள சாபங்கள் அனைத்தும் அவர்கள்மேல் விழும். ஆண்டவர் அவர்களது பெயரை மண்ணுலகினின்று துடைத்து விடுவார். "
( இணைச் சட்டம் 29:20 )
இவ்வாறு கடவுள் தன்னை மகா எரிச்சல் உள்ள தேவனாகக் காட்டிக் கொள்வதில் தவறியதே இல்லை .
பழைய ஏற்பாட்டில் இதுபோன்ற பல்வேறு நிகழ்ச்சிகளைக் , குறிப்பிட முடியும் .
தந்தையாகிய கடவுளும் சரி , மகனாகிய கடவுளும் சரி, கோபக்காரர்களாகவும், சபிப்பவர்களாகவும் , கடுஞ்சொல் கூறுபவர்களாகவுமே காட்டப்படுகிறார்கள் .
இந்தப் போக்கு திருவள்ளுவரின் வெகுளாமை மற்றும் இன்சொல் கூறல் ஆகிய கருத்துகளுக்கு முற்றிலும் முரணாக அமைகிறது அல்லவா