திருக்குறள் கிறித்துவ நூல் இல்லை 5 4

5 / 4 -இயேசு கிறித்துவின் / கடவுளின் கோபமும் கடுஞ்சொற்களும் !
×××
யாதுமறியான்.
@

இதுகாறும் இயேசு கிறித்துவின் கோபத்தைப் பற்றியும் அவர் வீசிய கடுஞ்சொற்களைப் பற்றியும் பார்த்தோம். இனி,
தந்தையாகிய கடவுள் தன்னை எப்படிப்பட்டவராகக் காட்டிக் கொள்கிறார் என்பதையும் பார்த்து விடுவது நலமே !

தொடக்கத்தில், கடவுள் உலகையும் உயிரினங்களையும், மனிதர்களையும் படைத்தபோது, ஆதாம் ஏவாளை ஏதேன் தோட்டத்தில் வாழ்வதற்கு அனுமதித்தார். அப்போது, அவர்களுக்கு ஒரு கட்டுப்பாட்டையும் விதித்தார். அவர்கள் அந்தத் தோட்டத்தில் உள்ள அனைத்து கனிவகைகளையும் புசிக்கலாம் . ஆனால், நடுவே உள்ள நன்மை தீமை அறியத்தக்க மரத்தின் கனியை மட்டும் புசிக்க கூடாது என்று . ஆனால் , பாம்பினால் ஏமாற்றப்பட்ட ஏவாள் அந்தக் கனியைத் தானும் புசித்து தன் கணவனாகிய ஆதாமுக்கும் கொடுக்கிறாள். இவ்வாறு அவர்கள் பாவத்தில் விழ்கிறார்கள். இந்த பழத்தைச் சாப்பிட்ட பாவத்திற்காக கடவுள் அவர்களைக் கோபத்துடன் சபிக்கிறார் பாருங்கள் .

" அவர் பெண்ணிடம் "உன் மகப்பேற்றின் வேதனையை மிகுதியாக்குவேன்; வேதனையில் நீ குழந்தைகள் பெறுவாய். ஆயினும் உன் கணவன் மேல் நீ வேட்கை கொள்வாய்; அவனோ உன்னை ஆள்வான்" என்றார்.
( தொடக்கநூல் 3:16 )
இன்றளவும் பெண்கள் மகப்பேற்றின் போது கடுமையான துன்பத்தை அனுபவிப்பற்கு கடவுளின் கோபம்தான் காரணமோ ?

முதல் மனிதன் ஆதாமையும் இவ்வாறு சபிக்கிறார் .
" அவர் மனிதனிடம், "உன் மனைவியின் சொல்லைக் கேட்டு, உண்ணக்கூடாது என்று நான் கட்டளையிட்டு விலக்கிய மரத்திலிருந்து நீ உண்டதால் உன் பொருட்டு நிலம் சபிக்கப்பட்டுள்ளது; உன் வாழ்நாளெல்லாம் வருந்தி அதன் பயனை உழைத்து நீ உண்பாய்.

முட்செடியையும் முட்புதரையும் உனக்கு அது முளைப்பிக்கும். வயல் வெளிப் பயிர்களை நீ உண்பாய்.

நீ மண்ணிலிருந்து உருவாக்கப்பட்டதால் அதற்குத் திரும்பும் வரை நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைத்து உன் உணவை உண்பாய். நீ மண்ணாய் இருக்கிறாய்; மண்ணுக்கே திரும்புவாய்" என்றார்."
(தொடக்கநூல் 3:17-19 )
கடவுளின் கோபம் தான் உருவாக்கிய மனித இனமே இறப்பதற்கு காரணமாகிறது .

பின் நாட்களில், மண்ணில் மனிதர்கள் பெருகிய போது, அவர்களிடையே குற்றமும் , பாவமும் பெருகின .
"அப்பொழுது ஆண்டவர், "நான் படைத்த மனிதரை மண்ணிலிருந்து அழித்தொழிப்பேன். மனிதர் முதல் கால்நடைகள், ஊர்வன, வானத்துப் பறவைகள்வரை அனைத்தையும் அழிப்பேன். ஏனெனில் இவற்றை உருவாக்கியதற்காக நான் மனம் வருந்துகிறேன்" என்றார்.
( தொடக்கநூல் 6 : 7 )
இந்தக் கடும் கோபத்தின் விளைவே ஜலப்பிரளயம். பெருகிய நீர்த்திரல் , நோவாவையும் அவன் குடும்பத்தாரையும், பேழையில் இருந்த உயிர்களையும் தவிர அனைத்து உயிர்களையும் கொன்றொழித்தது .
கடவுளின் கோபத்தின் விளைவைப் பார்த்தீர்களா ? மனிதன்தானே தவறு செய்தான் ? கால்நடைகளும், பிற உயிரினங்களும் என்னக் குற்றம் புரிந்தன ? அவை ஏன் கொல்லப்பட வேண்டும் என்ற கேள்விக்கு இங்கே இடமே இல்லை !

எழுதியவர் : யாதுமறியான். (18-Jul-25, 8:51 am)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 7

மேலே