பரவலாகும் பாசம்
பன்றியிடம் நெகிழும் பாசம் உண்டு
மரம் ஏறும் மந்தியிடமும் நிறைய உண்டு
கருமை காகத்திடம் அதிகம் உண்டு
கடல் வாழ் சுறா விடமும் நிறைந்து அது உண்டு
நீள் பகை வரும் போது அவைகள் ஒன்றையொன்று
வஞ்சித்துக் கொல்வதுமில்லை வரம்பு மீறுவதுமில்லை
அறிவில் சிறந்ததான மனிதனோ கட்டுண்ட காதலால்
ஆபத்தான ஆயுதத்ததால் பெண்ணை அழிக்கிறான்
நெறியாய் பிறந்து நிறைவாய் அன்பை பகிர்ந்தால்
நெளியாய் நடக்கும் நிகழ்வு கூட நிறைவாயாகும்
அழகு வாழ்க்கை நிறைந்தது மனித பிறவி
பழகும் முறையை சிறக்க வைக்க நீயே கருவி
- - - - -நன்னாடன்.