மனதில் உறுதி வேண்டும்

மனதில் உறுதி வேண்டும்

உறுதி இருக்கும் மனதில் உண்மை இருக்கும்
உண்மை இருக்கும் உள்ளத்தில் உரிமை இருக்கும்
உரிமை இருக்கும் மனதினில் கடமை இருக்கும்
கடமை இருக்கும் இடத்தில் கண்ணியம் இருக்கும்
கண்ணியம் இருக்கும் இடம்முழுதும் இனிமை இருக்கும்
இனிமை கொண்ட இதயத்தில் கருத்துக்கள் தோன்றும்
கருத்துக்கள் தோன்றும் இடம் கனவுகளுக்கு இடம் கொடுக்கும்
கனவுகள் நிறைவடைந்தால் இன்பங்கள் பிறக்கும்
இன்பங்கள் உருவானால் இனிய வாக்குகள் வளரும்
இனிய வாக்குகள் வளர்ந்தால் மகிழ்ச்சி பொங்கிடும்
மகிழ்ச்சி பொங்கிட வாழ்க்கை நலமாகும்
வாழ்க்கை நலமாகிட விடுதலையும் வந்திடும்
இதனால் மனதில் உறுதி வேண்டும்

எழுதியவர் : கே என் ராம் (10-Mar-24, 9:01 am)
சேர்த்தது : கே என் ராம்
பார்வை : 40

மேலே