உன் உள்ளம் கண்டேன்

உன் உள்ளம் கண்டேன் !

புதியன என்று
யாதுள
யாவும் நிலைபெற்று
உறைந்தனவே !

சிற்றெறும்பாய் ஊறும்
சிற்றறிவு
சிலவேளை கண்டு கொள்ளும்
பிறர்க்கெட்டா மறைபொருளை சிறிதாக!

ஆனாலும் எழுப்பும்
பேரொலியை
சிறுமணிபோல்
யானுந்தன்
திருவுள்ளம் கண்டதன்ன!!

-யாதுமறியான்.

எழுதியவர் : -யாதுமறியான் . (1-Jun-22, 9:18 am)
பார்வை : 146

மேலே