காதல் பிரிவு
காதல்பிரிவு
நேரிசை வெண்பா
என்னைப் பிரிந்தவர் சென்றதுன்பம் பின்னவர்
என்னை மகிழ இயக்கியதும் -- முன்னையவர்
என்னை மறந்துவிட்டு நீங்கிய அன்பின்மை
என்கண்முன் தோன்றுதே யின்று
வெகுநாள் என்னைப் பிரிந்து சென்றவர் இன்றெனை யவரும்
வந்துக் கூடிச் சேர்ந்து மகிழ்வித்தார். ஆயினும் எனக்கு என்னுடைய
எண்ணத்தில் அவர் என்னை அன்பிலாமல் எப்படி பிரிந்து எனக்குத்
துன்பம் கொடுத்தார் என்பதையே சொல்லி வாட்டுகிறது.
காமத்துப்பால் குறள் ஆறு/ இருபது
.......