பார்க்காத சாரதி

ஏண்டி துள்சி, உன்னோட கணவர்
வெளில போற போதும் வர்ற போதும்
இங்குள்ள சில பெண்கள் அவர்
காதில் விழாதபடி "பார்க்காத சாரதி
போறாருடி"ன்னு சொல்லறாங்கடி.
அவுரு பேரு என்னடி? ஏண்டி
அவரைப் பார்க்காத சாரதினு
சொல்லறாங்க?
@@@@@
ஓ அதுவா? அவர் என்னைப் பெண்
பார்க்க வந்த போது என்னை
நிமிர்ந்துகூடப் பார்க்காமல்
"பொண்ணு பிடிச்சிருக்கு"ன்னு
சொன்னாரு.
@@@@@@
எங்க மாமா "தம்பி, பொண்ணைத்
தலை நிமிர்ந்து பாருங்க.
பார்த்ததுக்கு அப்பறம் பொண்ணுப்
பிடிச்சிருக்குதா இல்லையான்னு
சொல்லுங்க தம்பி"ன்னு
சொன்னாரு.
@@@@@@
எனக்கு கூச்ச சுபாவமுங்க. நான்
எந்தப் பொண்ணையும் தலை
நிமிர்ந்து பார்க்கமாட்டேங்க. அது
அநாகரிகம்.
@@@@@@
தம்பி, நீங்க 'துள்சி'யைப்
பொண்ணுப்
பார்க்க வந்திருக்கிறீங்க.
பொண்ணைக் கொஞ்சம் நிமிர்ந்து
பார்த்துட்டு பொண்ணு பிடிச்சிருக்கா
இல்லையானு சொன்னா என்ன
கெட்டுப் போயிடும்?
@@@@@@@@
இங்க வர்றதுக்கு முன்னாடியே
'துள்சி'யோட புகைப்படத்தைப்
பார்த்தேன். ரொம்ப அழகான
பொண்ணு. நான் அதனால் தான்
நேரில நிமிர்ந்து பொண்ணைப்
பார்க்காமலே " பொண்ணைப்
பிடிச்சிருக்குது"ன்னு சொல்லறேன்.
@@@@@@@@
தம்பி பார்த்தசாரதி, நீங்க எந்தப்
பொண்ணையும் தலை நிமிர்ந்து
பார்க்கமாட்டேனு சொல்லறீங்க.
அப்ப நீங்க "பார்த்தசாரதி இல்லை.
பார்க்காத சாரதி"ன்னு எங்க மாமா
சொன்னார். மாப்பிள்ளை
வீட்டாருடன் எங்க வீட்டுக்கு
வந்திருந்த பெண்களில் யாரோ
ஒருவர் தான் " பார்க்காத சாரதி"
விசயத்தை இங்க
சொல்லியிருப்பாங்க. அதனால்
இங்க அவருக்கு பெண்கள் மத்தில
'பார்க்காதசாரதி'ன்னு பட்டப்பேரு
ஆகிருச்சு.
@@@@@@@
ஆமாண்டி துள்சி நானெல்லாம் உன்
கணவருக்கு முறைப் பொண்ணு
தான். குருதி (இரத்த) உறவில்
பொண்ணுக் கட்டறது அறிவியல் படி
தவறுன்னு சொல்லக்கூடியவர் உன்
கணவர். இதுவரைக்கும் என்னை
நிமிர்ந்து ஒரு தடவை கூடப்
பார்த்ததில்லை. உங்க மாமா உன்
கணவருக்குப் பார்க்காதசாரதின்னு
சரியான பேரை வச்சிட்டாரு. உன்
கணவர் ஒழுக்கமானவர். துள்சி, நீ
கொடுத்து வச்சவடி.
@@@@@
நன்றிடி கல்பு.