எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

              -------------ஞானத் தென்றலிலே-----------------


தத்துவ விஷயங்களில் சுவை உள்ளவர்கள் திருமூலர் பற்றி 
அறிந்திருப்பீர்கள் 
ஒரு சிவயோகி நடந்து செல்லுகையில் தன் ஒரே சிறிய    மகன் 
அகாலமாய் இறந்து விட்டதை சொல்லி புலம்பி அழுது கொண்டிருந்தாள் தாய் .இறந்த சிறுவன் ஓர் ஆட்டிடையன் அவன் 
ஆடு மேய்த்து சம்பாத்தித்து வரும் பணத்தில் தாயும் மகனும் 
வாழ்ந்து கொண்டிருந்தனர் அவன் பெயர் மூலன் 
அந்த தாயின்பால் கருணை கொண்ட சிவயோகி தன்னுடலை 
நீத்துவிட்டு இறந்த மூலனின் உடலில் புகுகிறார் 
மூலன் உயிர் பெற்று எழுகிறான் 
தாய் மகிழ்ந்து போகிறாள் . 
மூலனின் உடலிலிருந்து சிறந்த ஞான உபதேசங்களை 
செய்கிறார் சிவயோகி அவர் திருமூலர் என்ற சிறப்புப் பெயர் 
பெறுகிறார் 
அவர் அருளிய ஞானப் பொற்குவையே திருமந்திரம் எனும் நூல் .
அதில் எண்ணற்ற பாடல்கள் உள்ளன 
அதில் ஒன்றை இன்று பார்ப்போம் :

மரத்தை மறைத்தது மாமத யானை 
மரத்தில் மறைந்தது மாமத யானை 
--மரத்தினால் செதுக்கப்பட்ட யானை சிற்பம் வைக்கப் பட்டிருக்கிறது  சற்று தொலைவிலிருந்து பார்க்கும் பொது நிஜ 
யானையோ என்ற தோற்ற மயக்கத்தைத் தருகிறது அருகில் 
சென்றால் வெறும் மரச் சிற்பம் என்று தெளிவாகிவிடுகிறது 
தந்தையுடன் செல்லும் சிறுவன் மர யானைச் சிற்பத்தைக் கண்டு 
நிஜ யானையோ என்று முதலில் அஞ்சுகிறான் 
தந்தை அருகில் சென்று தொட்டுக்காட்டியதும் மரப் பொம்மைதான் என்று உணர்ந்து அதன் தும்பிக்கையை பிடித்து 
விளையாடுகிறான் 
இந்த உவமானத்தை வைத்து திருமூலர் சொல்லும் ஞானம் 
அடுத்த இரண்டு அடிகளில் 
பரத்தை மறைத்தது பார்முதல் பூதம் 
பரத்தில் மறைந்தது பார்முதல் பூதம் 
--பரம் என்றால் என்ன பூதம் என்றால் பேய் பிசாசு இல்லை 
பின் ?  அடுத்த பகுதியில் பார்ப்போம் 
 

மேலும்

_______கோபுர நிழலில் ஆ & நா______


கோடை வெய்யில்
ஆலய கோபுரம்
கோபுர நிழலில் இருவர்
ஒருவர் ஆத்திகர்
மற்றவர் நாத்திகர்

ஆஹா கோபுர நிழல்
கடவுள் தந்த குளுமை
என்றார் ஆத்திகர்

இல்லை கற்சிற்பியின்
கலை வடிவம் தந்த குளுமை
என்றார் நாத்திகர்

ஆலயமும் கோபுரமும்
ஆண்டவனுக்குத்தானே ___ஆ

அவைகளை ஆண்டவனுக்கும்
நமக்கும் குளுமை நிழல் தர
உருவாக்கியது கற்சிற்பியின்
கலைத் திறன்தானே ____ நா

நிழல் விலக வெய்யில் சுட்டது

கடவுளின் கொடுமையோ இது
என்றார் நாத்திகர்


இல்லை கதிரவன் கொடுமை
என்றார் ஆத்திகர்

கதிரவன் கடவுளின் படைப்பு 
என்பீர்களே பின் ? என்றார் 
நாத்திகர்
போதும் அதோ சிற்பியின்
Show Room 
கடவுள் சிலையாக நீ
தரிசி
நான் கலையாக ரசிக்கிறேன்

எதற்கு
ஓசியில் ஏசி கிடைக்கும்

ஆஹா பேசாமல் நுழைந்தனர்
ஆ & நா































































மேலும்

----------------------------------தமிழுக்கும் அமுதென்று பேர் ------------------------------------


பனிபொழியும் மார்கழித் திங்கள் உன்னிருவிழி  
கனிமொழி சிந்தும் உன்செந்தமிழ்ச் செவ்விதழ் 
நனிநற்றமிழ் பாடும் உன்யாப்புக்  காவ்யமுகம் 
இனிஇனி பிறிதொன்று     எனக்கில்லை  தோழி  !

----மா பலா வாழை --முக்கனி என்பார்கள் . இயல் இசை நாடகம்   முத்தமிழ் 
என்பார்கள் 
பாவேந்தர் சொல்லுவார் கோரிக்கையற்று கிடக்குதண்ணே இங்கே வேரில் பழுத்த 
பலா என்று அழகிய உவமையில் ஒரு கவிதையில்     
குற்றாலம் சென்றால் இந்த உவமையின் அழகை நேரிலே காணலாம் 
யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம் 
என்று பாடினான் பாரதி . சீடன் பாரதி தாசன் அதன் விளக்கமாக இனிது மட்டுமில்லை தமிழ் அமுது அமுது என்று வரிக்கு போற்றி  எழுதினான்    

தமிழுக்கும் அமுதென்று பேர் --அந்தத் 
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர் ----என்று செல்லும் பல அடிகளில் 
அந்த இனிய கவிதை 
தூளியிலோ தொட்டிலிலோ தாலாட்டாக தாய்மார்கள் பாடலாம் 
தூங்காத குழந்தை உறங்கி விடும் உறங்கிய குழந்தை விழிக்கும் போது
ஒன்ஸ் மோர் என்று கேட்கக் கூடும் 
இன்னொரு எண்ணப் பதில் கவிதை பற்றி விரிவாகப் பார்ப்போம் 
எங்கெங்கு காணினும் சக்தியடா என்று கனக சுப்பு ரத்தினம் பாரதி முன் 
முழங்கினான் எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று 
சங்கே முழங்கு என்று இன்னொரு கவிதையில் முழுங்கினேன் 
காத்திருங்கள் இன்னொரு பகுதியில் இருப்போம் 

மேலும்

---------------------------------------------------------எண்ணத்தில் ஓடம்------------------------------------------------------------------------
எண்ணத்தை ஓடவிட்டேன் சிந்தனை சிகரம் தொட்டேன் 
எண்ணத்தில் ஓடம்விட்டேன் காதலலையில் மிதந்தேன் 
கண்களின் அசைவினில் கவிதை ஒன்று சொன்னாள்
வண்ண மாலையில் அவளுடன் நடந்தேன் 

---அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் கம்பன் துவக்கி வைத்த காதல் காட்சி 
பின்னாட்களில் காதல் கவிஞர்களுக்கு முன்னோடியாய் திகழ்ந்த கம்பனின் கலிவிருத்தப் பாடல்
வள்ளுவன் அதற்கும் முன்பே காதலின் மென்மையை தொட்டுக்க காட்டியிருக்கிறான்.
மலரினும் மெல்லியது காமம் (காதல் என்று கொள்க )

பாவேந்தர் காதலை ஒரு கவிதையில்    அற்புதமாக சொல்லியிருப்பார் 

கூடத்திலே மனப்படத்திலே விழிகூடிக்கிடந்த   ஆணழகை 
ஓடைக்குளிர் மலர்ப் பார்வையினாள் உன்னத் தலைப்படும் நேரத்திலே 
பாடம் படித்து நிமிர்ந்த விழிதன்னில் பட்டுத் தெறித்தது மானின்விழி 
ஆடைதிருத்தி நின்றாள் இவனாயிரம் ஏடு திருப்புகின்றான் 

---இக்கவிதையில்   கம்பன் தோற்றான் என்று சொல்வதா கம்பனை கவிஞன்   வென்றான் என்று  சொல்வதா?
இல்லை கம்பன் வழி நடந்தான் பாரதி தாசன்   என்று சொல்வதே சாலப் பொருந்தும் 
தான் வாழும் காலத்திற்கேற்ப  கற்பனையில் ஒரு காதல் காட்சியை கண்முன் கொண்டு 
நிறுத்துகிறான் கவிஞன் .மேலும் தொடரலாம் 

   விழிகூடிக் கிடந்த அழகை ...ஓடைக்குளிர்  மலர்ப் பார்வையினாள் ---நான் ரசித்த சொல்லாடல்கள் 
ஆடைதிருத்தி நின்றாள் ---அப்படி என்றால் ? 
ஆயிரம் ஏடு திரும்புகிறான் ----காட்சியின் இலக்கிய அழகை ரசித்தோர் எழுதலாம் 
       

மேலும்

தங்கள் அன்பிற்கும் மதிப்புக்கும் மிக்க நன்றி 20-Oct-2021 4:27 pm
கருத்துக்கு மிக்க நன்றி கவின் சாரலரே வணக்கம் 19-Oct-2021 5:35 pm
நானல்லவா உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் வருகையிலும் கருத்துப் பதிவிலும் மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி கவி இலக்கியப் பிரிய பழனிகுமார் இரண்டு பழனியர் கருத்தினில் நெஞ்சில் ஐங்கனி கூட்டு அமுதத் தித்திப்பு 19-Oct-2021 5:24 pm
கவிதையுடன் கருத்து மிக்க மகிழ்ச்சி அங்கம் மின்னக் கண்டவன் திகைப்பில் ஆயிரம் என்ன கோடி பக்கம் புரவி வேகத் திலவன் புரட்டுவன் ----ஆஹா அருமையான விளக்கம் மிக்க நன்றி கவி இலக்கியப்பிரிய பழனி ராஜரே 19-Oct-2021 5:17 pm

----------------------------------------=================எழினி-------------------------------------------------------------------------------

கவின் சாரலன் • 28-Apr-2021 4:07 pm   இலக்கியம் சார் தொன்மை சொல் பற்றி கேட்டிருக்கிறீர்கள் மகிழ்ச்சி. பாராட்டுக்கள்
எழினி என்றால் திரை நானும் அறிந்த பொருள் அதுதான் கம்பர் தன் கவிதையில் எடுத்தாண்டிருக்கும் விதம் அழகு
தெண்டிரை எழினி காட்ட ---தென் திரை எழினிகாட்ட --இங்கே திரை என்றால் கடல்
என்று பொருள் . பின் திரைக்கு எழினி என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்
அந்தக் கவிதை இப்படிச் செல்லும்

தண்டலை மயில்களாட தாமரை விளக்கம் தாங்க
கொண்டல்கள் முழவினேங்க குவளைகண் விழித்து நோக்க
தெண்டிரை எழினிகாட்ட தேம்பிழி நல்மகர யாழின்
வண்டுகள் இனிதுபாட மருதம் வீற்றிருக்கும் மாதோ !  

----கேள்விகேட்ட  கவிச்சகோ   அருண் இன்று என் என் ஏப்பிரல்  பதிலுக்கு இன்று நன்றி 
தெரிவித்திருந்தார் அப்பதில்லை  உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் 
என் போனஸ் கவிதையும் உங்கள் எண்ணத்தை குளிர்விக்க 
 
எழினி என்றால் 
திரை அல்லது கடல் 
எழில் நீ என்றால் 
இதழ்ச் செந்திரரை
விரிக்கும் அழகுப் புன்னகை 
விழிஎழில்  நீலக்கடல் 

நீலக்கடல் அழகோ 
நீள் விழிகள் 
நெஞ்சத்தை அள்ளிச் செல்லுதடி 
செவ்விதழ் செந்திரை விரித்து 
நீ சிந்தும் அமுதப் புன்னகை 

மேலும்

                 -----------------------------கவிதா நதி தீரத்திலே---------------------------------------


கபீர் தாஸின் குறளடிகள் 

தோட்டக்காரன் வருவதைப்பார்த்த மொட்டுக்கள் கூவி உரைத்தன 
பார்த்துப் பார்த்து பறித்துச் சென்றான்( இன்று உங்கள் முறை) நாளை எங்கள் முறை   !

சந்த் கபீரின் தோகே குறளடிகள் :

  malin aavat dekh ke, kaliyan kahe pukaar .
phoole phoole chun lie, kali hamaari baar . 
 

மேலும்

------------------------------------நெய்தல் நாயகி --------------------------------------------------------------------
இன்றிணைந்த ஒரு வாசகரின் கேள்விக்கு நான் சொன்ன பதில் இங்கே 
உங்களுக்காகவும் ,,,,


பிரித்து அழுக உங்கள் Pirithu Aluthuga இப்படித்தான் வருது தமிழில்
அழுவனுமா அளுவோம்
நாடென்ன உலகம் கிடக்கிறக்கிடையில் எல்லோரும் அழுதுகிட்டுதான் இருக்காங்க !
தப்பாய் செய்த தட்டச்சும் இப்போதைய நிலைக்கு பொருத்தமாகத்தான் இருக்கிறது
உயிரைப் பிரித்துத்தானே உறவுகளை அழவிட்டுக் கொண்டிருக்கிறது இந்தக் கொடுநோய் கொரோனா  !

அந்தக் காலத்துல கண்ணதாசன் ஒரு பாட்டுப் போட்டாரு

பிறக்கும் போதும் அழுகின்றாய் இறக்கும் போதும் அழுகின்றாய்
ஒருநாளேனும் கவலை மறந்து சிரிக்க மறந்தாய் மானிடனே
அதில் மிக அற்புத வரிகள்
இரவின் கண்ணீர் பனித்துளி என்பார்
முகிலின் கண்ணீர் மழைஎனச் சொல்வார்
இயற்கை அழுதால் உலகம் செழிக்கும்
மனிதன் அழுதால் இயற்கை சிரிக்கும் .....இயற்கை சிரிக்கும் !
நியாயமாக நீங்கள் கேட்க நினைத்த கேள்வி
கரையோரம் பிரித்து எழுதுக
பிரிந்து புறம் சென்று போரிடப் போன காதலன் இன்னும் வரவில்லை என்று
கண்ணீர் வடித்து கடல் கரை ஓரம் (இதை சேர்த்தெழுதி நன்னூல் சூத்திர விதிப்படி
புணர்ச்சி இலக்கணம் சொல்லட்டும் தெரிந்தோர் ) நிற்கிறாள் நெய்தல் நாயகி .
உங்கள் கேள்விக்குப் பதில் சொல்லிவிட்டேன் என்று நினைக்கிறேன் .

எண்ணி எண்ணிச் சிவந்த தமிழ் நெஞ்சங்கள் ஏதேனும் இதுகுறித்து எண்ணம் 
இருப்பின் எடுத்துரைக்கலாம் . கேட்கக் காத்திருக்கிறேன் .

மேலும்

---------------பாரதி   போற்றிய தந்தையர் தினம் -----------------------


உலகெங்கிலும் பிறந்த நாட்டை தாய் நாடு என்று தான் சொல்வார்கள் 
ஆனால் பாரதி தந்தையை இப்படி வித்தியாசமாக போற்றுகிறார் ,

செந்தமிழ் நாடெனும் போதினிலே 
இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே 
எங்கள் தந்தையர் நாடெனும் போதினிலே 
ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே !

---விதிவிலக்காக இப்படி அழைக்கும் ஒரு நாடும் உலகத்தில் இருக்கிறது .
ஜெர்மானியர்கள் தங்கள் நாட்டை FATHERLAND   தந்தையர் நாடு என்றுதான் 
அழைப்பார்கள் ! 

மேலும்

பாராட்டுதலில் மிக்க மகிழ்ச்சி அதுவும் எண்ணத்தில் வந்து கருத்து சொன்னமைக்கு சிறப்பு நன்றி கவிப்பிரிய செல்வமுத்து மன்னார் ராஜ் ! 21-Jun-2020 9:40 pm
ஐயா... தங்களின் பதிவு என்றுமே இனிமை.... 21-Jun-2020 8:41 pm

        ---------------------------------கொரோனா ஞானம்   ---------------------------------------------------


  Is it  not foolish to celebrate fools days
while  breath strangulating disease is on loose?
Wise to be at home in isolation
Wise to wash your hands with soap is hygienic
Wise and humane to help  fellow humans  in need
Wise to follow  strictly the social distancing
Wise to follow the medical and governmental measures
to mitigate and contain the killer disease soon!
We will celebrate more wisdom days  in these disease days!

To be or not to be the Hamilitan phrase may pose a threat to you
But we the human race will live for ever for ever in this earth
healthily and happily is wise   auto suggestion!  

மேலும்

YES THANK YOU POETIC PRIYA 01-Apr-2020 11:43 am
true kavin ...pls be safe ....stay home all ... 01-Apr-2020 11:37 am

                           -------------------எனது டிவிட்டர் செய்தி ------------------------------ 


  KEEP SAFE DISTANCE is not just catchword for trucks and lorries only ! Now it is watchword for human beings also ! Follow the message strictly , medically and religiously ! You need not follow me in the twitter ! but do follow my message on the road   !

DON 'T  RISK SAFETY  WEAR MASK  !

மேலும்

மேலும்...

மேலே