எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

_______கோபுர நிழலில் ஆ & நா______ கோடை வெய்யில்...

_______கோபுர நிழலில் ஆ & நா______


கோடை வெய்யில்
ஆலய கோபுரம்
கோபுர நிழலில் இருவர்
ஒருவர் ஆத்திகர்
மற்றவர் நாத்திகர்

ஆஹா கோபுர நிழல்
கடவுள் தந்த குளுமை
என்றார் ஆத்திகர்

இல்லை கற்சிற்பியின்
கலை வடிவம் தந்த குளுமை
என்றார் நாத்திகர்

ஆலயமும் கோபுரமும்
ஆண்டவனுக்குத்தானே ___ஆ

அவைகளை ஆண்டவனுக்கும்
நமக்கும் குளுமை நிழல் தர
உருவாக்கியது கற்சிற்பியின்
கலைத் திறன்தானே ____ நா

நிழல் விலக வெய்யில் சுட்டது

கடவுளின் கொடுமையோ இது
என்றார் நாத்திகர்


இல்லை கதிரவன் கொடுமை
என்றார் ஆத்திகர்

கதிரவன் கடவுளின் படைப்பு 
என்பீர்களே பின் ? என்றார் 
நாத்திகர்
போதும் அதோ சிற்பியின்
Show Room 
கடவுள் சிலையாக நீ
தரிசி
நான் கலையாக ரசிக்கிறேன்

எதற்கு
ஓசியில் ஏசி கிடைக்கும்

ஆஹா பேசாமல் நுழைந்தனர்
ஆ & நாநாள் : 24-May-22, 10:44 pm

மேலே