எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

----------------------------------தமிழுக்கும் அமுதென்று பேர் ------------------------------------ பனிபொழியும் மார்கழித் திங்கள்...

----------------------------------தமிழுக்கும் அமுதென்று பேர் ------------------------------------


பனிபொழியும் மார்கழித் திங்கள் உன்னிருவிழி  
கனிமொழி சிந்தும் உன்செந்தமிழ்ச் செவ்விதழ் 
நனிநற்றமிழ் பாடும் உன்யாப்புக்  காவ்யமுகம் 
இனிஇனி பிறிதொன்று     எனக்கில்லை  தோழி  !

----மா பலா வாழை --முக்கனி என்பார்கள் . இயல் இசை நாடகம்   முத்தமிழ் 
என்பார்கள் 
பாவேந்தர் சொல்லுவார் கோரிக்கையற்று கிடக்குதண்ணே இங்கே வேரில் பழுத்த 
பலா என்று அழகிய உவமையில் ஒரு கவிதையில்     
குற்றாலம் சென்றால் இந்த உவமையின் அழகை நேரிலே காணலாம் 
யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம் 
என்று பாடினான் பாரதி . சீடன் பாரதி தாசன் அதன் விளக்கமாக இனிது மட்டுமில்லை தமிழ் அமுது அமுது என்று வரிக்கு போற்றி  எழுதினான்    

தமிழுக்கும் அமுதென்று பேர் --அந்தத் 
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர் ----என்று செல்லும் பல அடிகளில் 
அந்த இனிய கவிதை 
தூளியிலோ தொட்டிலிலோ தாலாட்டாக தாய்மார்கள் பாடலாம் 
தூங்காத குழந்தை உறங்கி விடும் உறங்கிய குழந்தை விழிக்கும் போது
ஒன்ஸ் மோர் என்று கேட்கக் கூடும் 
இன்னொரு எண்ணப் பதில் கவிதை பற்றி விரிவாகப் பார்ப்போம் 
எங்கெங்கு காணினும் சக்தியடா என்று கனக சுப்பு ரத்தினம் பாரதி முன் 
முழங்கினான் எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று 
சங்கே முழங்கு என்று இன்னொரு கவிதையில் முழுங்கினேன் 
காத்திருங்கள் இன்னொரு பகுதியில் இருப்போம் 

நாள் : 23-Oct-21, 11:19 am

பிரபலமான எண்ணங்கள்

மேலே