எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

----------------------------------------=================எழினி------------------------------------------------------------------------------- கவின் சாரலன் • 28-Apr-2021 4:07 pm...

----------------------------------------=================எழினி-------------------------------------------------------------------------------

கவின் சாரலன் • 28-Apr-2021 4:07 pm   இலக்கியம் சார் தொன்மை சொல் பற்றி கேட்டிருக்கிறீர்கள் மகிழ்ச்சி. பாராட்டுக்கள்
எழினி என்றால் திரை நானும் அறிந்த பொருள் அதுதான் கம்பர் தன் கவிதையில் எடுத்தாண்டிருக்கும் விதம் அழகு
தெண்டிரை எழினி காட்ட ---தென் திரை எழினிகாட்ட --இங்கே திரை என்றால் கடல்
என்று பொருள் . பின் திரைக்கு எழினி என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்
அந்தக் கவிதை இப்படிச் செல்லும்

தண்டலை மயில்களாட தாமரை விளக்கம் தாங்க
கொண்டல்கள் முழவினேங்க குவளைகண் விழித்து நோக்க
தெண்டிரை எழினிகாட்ட தேம்பிழி நல்மகர யாழின்
வண்டுகள் இனிதுபாட மருதம் வீற்றிருக்கும் மாதோ !  

----கேள்விகேட்ட  கவிச்சகோ   அருண் இன்று என் என் ஏப்பிரல்  பதிலுக்கு இன்று நன்றி 
தெரிவித்திருந்தார் அப்பதில்லை  உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் 
என் போனஸ் கவிதையும் உங்கள் எண்ணத்தை குளிர்விக்க 
 
எழினி என்றால் 
திரை அல்லது கடல் 
எழில் நீ என்றால் 
இதழ்ச் செந்திரரை
விரிக்கும் அழகுப் புன்னகை 
விழிஎழில்  நீலக்கடல் 

நீலக்கடல் அழகோ 
நீள் விழிகள் 
நெஞ்சத்தை அள்ளிச் செல்லுதடி 
செவ்விதழ் செந்திரை விரித்து 
நீ சிந்தும் அமுதப் புன்னகை 

நாள் : 16-Oct-21, 9:00 am

மேலே