எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

யதார்த்த நிலை .. --------------------------------- ஒருவரின் வாழ்க்கை தாலாட்டில்...

யதார்த்த நிலை ..
---------------------------------

ஒருவரின் வாழ்க்கை தாலாட்டில் ஆரம்பித்து ஒப்பாரியில் முடிகிறது . முதலாவது கேட்டாலும் புரியாத மழலைப் பருவம் . இரண்டாவது கேட்க முடியாத நிலை . 

இடைப்பட்ட காலத்தில் ஒருவர் கேட்கும் பலவிதமான ஏச்சும், பேச்சும், வாழ்த்தும், சந்திக்கும் நல்லதும் கெட்டதும், ஏற்படும் மகிழ்ச்சியும், சோகமும் மற்றும் அனைத்து நிகழ்ச்சிகளும் நெஞ்சில் தங்கிவிடும். சிலவற்றை நாம் மறந்தாலும் , பலவற்றின் நினைவுகள் நம்மோடு இருந்து மறைந்து விடும்.

வீடு வரை உறவு, வீதி வரை மனைவி, காடுவரை பிள்ளை, கடைசி வரை யாரோ... கவியரசரின் வைர வரிகள் வாழ்க்கையின் உண்மை தத்துவம். அவரைவிட மிக எளிமையாக உணர்வுபூர்வமாக இனி எவரும் வாழ்க்கையை விளக்கிக் கூற முடியாது. 

நாம் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் நம்மைப் பற்றிய பேச்சுக்கள் தான் முக்கியம். தற்போது மனிதர்களை விட , மனிதனால் உருவாக்கப்பட்ட கணினியும் அதைச் சார்ந்துள்ள சாதனங்களும் மட்டுமே நம்மை நினைவுப்படுத்தும் நிலை இன்று. அவை நினைவுகளை சேமித்து வைக்கும் கருவூலங்கள் என்பது மறுக்க முடியாத உண்மை . 

ஆனால் தற்போது உள்ள நிலை... ஆதாரத்தை விட ஆதார் அட்டை தான் ( Aadhar card ) அவசியமாகிறது . மறைவுக்குப் பின் உயிரற்ற உடலை காண வருபவர்கள் கூட குறைந்து விட்டது. இது நிதர்சனமான உண்மை.

ஆகவே காலத்தின் மாற்றத்தை கருத்தில் கொண்டு , வாழ்க்கையின் யதார்த்தத்தை புரிந்து கொண்டு அதற்கேற்ப சிந்தித்து, செயலாற்றுவது நமது கடமை . 

பழனி குமார் 
 18.10.2021  

நாள் : 18-Oct-21, 3:56 pm

மேலே