எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சொல்லும் செயலும் சொல்லில் இனிமை வேண்டும் செயலில் துணிவு...

சொல்லும் செயலும்

சொல்லில் இனிமை வேண்டும்
செயலில் துணிவு வேண்டும்
சொல்லிலும் செயலிலும் உறுதி வேண்டும் 

சொல்லில் உண்மை வேண்டும்
செயலில் தூய்மை வேண்டும்
சொல்லிலும் செயலிலும் நம்பிக்கை வேண்டும்

சொல்லில் பணிவு வேண்டும்
செயலில் பண்பு வேண்டும்
சொல்லிலும் செயலிலும் தெளிவு வேண்டும்

சொல்லில் விவேகம் வேண்டும்
செயலில் வேகம் வேண்டும்
சொல்லிலும் செயலிலும் உத்வேகம் வேண்டும்

சொல்லும் செயலும் இணைந்து சென்றால் வானமும் வசப்படும்

பதிவு : Jayachandran
நாள் : 18-Oct-21, 4:23 pm

மேலே