எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஒருவரை நலமா ? எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டார்கள்...

ஒருவரை நலமா ? எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டார்கள் . சிலர் ஏதோ இருக்கிறேன் , என்ன செய்வது , வந்து பிறந்துவிட்டேன் , வாழ்ந்து தீர வேண்டிய நிலைதான் என்று சலிப்புடன் பதில் கூறுவர். ஒரு சிலர் வாழ்ந்து பார்க்க வேண்டும் என்று தன்னம்பிக்கையுடன் பேசுவர். பலருக்கும் இந்த உரையாடலை கேட்ட அனுபவம் இருக்கும் .


உண்மைதான் , அனைவருக்கும் ஒரே மாதிரி வாழ்க்கை அமைவதில்லை .நன்றாக  வாழ்ந்து கெட்டவர்கள் உண்டு . சிலர் சாதாரண நிலையில் இருந்து நல்ல நிலைக்கு உயர்ந்து இருப்பார்கள் , மறுக்கவில்லை . 

வாழ்க்கை என்பது ஒரு போர்க்களம் . அதில் நாம் வெற்றி பெற வேண்டும் என்பது பொதுவாக அனைவரின் இலக்கு என்றாலும் , சிலர் தோல்வியை கண்டு அஞ்சுவது, துவண்டு விடுவது , சோர்வு அடைவது இயற்கை . ஆனால் நமது முயற்சி அத்துடன் நின்று விடக்கூடாது . துணிவும் , எதிர்நீச்சல் போடும் ஆற்றலும் மனோதிடமும் மிக அவசியம் . மேலும் சிலர் எல்லாம் விதிப்படிதான் நடக்கும் என்பர். விதி என்பது நடைமுறை வாழ்வில் இல்லை . நாம் நினைத்துக் கொள்வது கற்பனையாக . அவ்வாறு நீங்கள் எண்ணினால் ,  தனது மதி கொண்டு அந்த விதியை வென்றிட வேண்டும் . 

பகுத்தறிவைப் பயன்படுத்தி வகுத்து வாழ்ந்திட வேண்டும். எதிலும் ஒரு திட்டமிடல் வேண்டும் . இவ்வாறு நான் செய்யத் தவறிவிட்டது , எனது தனிப்பட்ட வாழ்க்கையில் நான் பெற்ற அனுபவம் , என்னை மற்றவர்களுக்கு அறிவுரை அல்ல , ஆலோசனை வழங்க முடிகிறது. குறிப்பாக வளரும் தலைமுறை சிந்தித்து நல்ல பாதையை தேர்வு செய்து வாழ வேண்டும், வாழ்ந்து காட்ட வேண்டும் . 


 பழனி குமார்    
  19.10.2021

நாள் : 19-Oct-21, 9:31 am

மேலே