தஞ்சை பெரிய கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்துவது சாத்தியமா

தஞ்சாவூரில் உள்ள பெருவுடையார் ஆலயத்தில் பிப்ரவரி மாதம் நடக்கவிருக்கும் குடமுழுக்கை தமிழில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. வழக்குகளும் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளன. ஆனால், அது சாத்தியமா?

தஞ்சாவூரில் உள்ள பெருவுடையார் ஆலயம் எனப்படும் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் பிப்ரவரி ஐந்தாம் தேதி குடமுழுக்கு நடத்த கோவில் நிர்வாகம் திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து அந்தக் கோயிலில் பெருமளவில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான கோயில்கள் ஆகம விதிகளின்படி கட்டப்பட்டவை. இந்தக் கோயில்கள் அனைத்திலுமே கடந்த ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கும் மேலாக, ஆகம விதிகளின்படியே குடமுழுக்கு நடத்தப்பட்டு வருகிறது.

சைவக் கோயில்களுக்கென 28 ஆகமங்களும் வைணவக் கோயில்களுக்கு என 2 ஆகமங்களும் இருக்கின்றன. தஞ்சைப் பெரிய கோயில் மகுடாகமத்தின் படி கட்டப்பட்டது. ஒரு கோயில் எந்த ஆகமத்தின்படி கட்டப்பட்டதோ, அதே ஆகமத்தின்படியே வழிபாட்டு முறைகள், கோயில் செயல்பாடுகள் இருப்பது வழக்கம்.

இந்த விவகாரம் தொடர்பான வழக்கு ஒன்றில் தேவஸ்தானத்தின் சார்பில் அளிக்கப்பட்ட குறிப்பில், கோயிலின் குடமுழுக்கு ஆகம முறைப்படியே நடத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. ஆகம மந்திரங்கள் சமஸ்கிருதத்தில் இருப்பதால், குடமுழுக்கு சமஸ்கிருத முறைப்படியே நடக்கவிருப்பதாக கருதப்படுகிறது.

அதற்கு மனுதாரர் தரப்பு, "இதற்கு முன்பாக 1997-98ஆம் ஆண்டுகளில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. அப்போது சமஸ்கிருத மொழியில் நடத்தப்பட்டது" என்று கூறியது.

ஆனால், அந்த சமயத்தில் தமிழ் அர்ச்சகர்கள் இல்லை என்றும் இப்போது சைவ அர்ச்சகர்களுக்கான பயிற்சிகளை அரசே வழங்கியிருக்கிறது. ஆகவே தமிழில் குடமுழுக்கு நடத்த முடியும் என்றும் கூறப்பட்டது.

இதற்கிடையில், பெரிய கோயில் தேவஸ்தானத்தின் சார்பில் ஒரு குறிப்பு நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டது. அதில், 1980 மற்றும் 1997ல் நடைபெற்ற திருக்குடமுழுக்கு விழாக்களில் பின்பற்றப்பட்ட நடைமுறைகளின்படியே இந்தத் திருக்குட முழுக்கு விழாவும் நடைபெறும் எனக் கூறப்பட்டிருந்தது.

மேலும், 2002ஆம் ஆண்டு அக்டோபர் 21, 22ஆம் தேதிகளில் அனைத்து உலக சைவ சித்தாந்த ஆராய்ச்சி நிறுவனமும் தமிழ்நாடு அர்ச்சகர்களின் ஆகம வல்லுனர் குழுவும் இணைந்து ஒரு ஆகம கருத்தரங்கில் இது தொடர்பாக ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில், ஆகம முறைப்படி அமைந்த கோயில்களில் ஆகம முறைப்படியே குடமுழுக்கு நடைபெற வேண்டுமென அத்தீர்மானம் கூறியது. இது தொடர்பாக ஆதீனங்களும் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.

ஆகவே, கோயிலில் உள்ள பழக்கவழக்கத்தின் அடிப்படையிலும் ஆகம வல்லுனர்களின் கருத்துருவின் அடிப்படையிலும் குடமுழுக்கு விழா நடைபெறும் என தேவஸ்தானத்தின் சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

குடமுழுக்கை தமிழில் நடத்த வேண்டுமென மனுதாரர் கூறியிருந்த நிலையில், தேவஸ்தானம் சமர்ப்பித்த குறிப்பில் அது தொடர்பாக ஏதும் தெரிவிக்கப்படவில்லை.

இந்த வழக்கில் தஞ்சைக் கோயிலின் தேவஸ்தானம் இணைக்கப்படவில்லை என்பதால், அவர்களை எதிர் மனுதாரராக சேர்க்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு ஜனவரி 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

“தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு தமிழ் ஆகம விதிப்படியும், சமஸ்கிருதத்திலும் நடைபெறும் “ - இந்து சமய அறநிலையத்துறை

கடந்த முறை தமிழ் ஆகம விதிப்படியும், சமஸ்கிருதத்திலும் குடமுழுக்கு நடத்தப்பட்டதாக கூறிய அவர், இந்த முறை குடமுழுக்கு விழாவில் தேவாரம், திருவாசகம் உள்ளிட்டவற்றை கற்றறிந்த 166 தமிழ் ஓதுவார்கள் வருவதாகவும் கூறினார். தமிழ் ஆகம விதிப்படி மங்கள இசை, வேத பாராயணம், திருமுறை பாராயணம் உள்ளிட்டவற்றுடன் குடமுழுக்கு நடைபெறும் என்றும் வழக்கறிஞர் தெரிவித்தார்.

எழுதியவர் : “இந்து சமய அறநிலையத்துறை (26-Jan-20, 8:54 pm)
பார்வை : 114

சிறந்த கட்டுரைகள்

மேலே