பரமரகசியம் 5

பரமரகசியம் 5

மனிதன் காயகற்பம் என்ன வென்று அறிய பிரம்மாவும் ஹரியும் தேடியக் கால் தலையை
கண்டுபிடிக்க வேண்டும் holly waster என்று சொல்லப்படுகிற சுத்த ஜலம் கண்டு
பிடித்துக் கடவுளிடம் சேரவேண்டும் என்று நினைப்பவனின் கடமை ஆகிறது.
இதற்கு சித்தர்களின் நூலில் பதில் மறைந்திருக்கிறது. தலை என்பதே அண்டமாகும்.
கால் என்பதே பிண்டமாகும் அண்டமென்பது பஞ்ச பூதத் தில் ஒன்று. அண்டம் ஆகாயசக்தி
யாகும். பிண்டம் என்பது கால் அல்லது மண், இ துவும் பஞ்ச பூதத்தில் ஒன்று..இதுதான்
மண்ணும் வின்னும் என்றார்கள். இது தவிர சுத்தஜலம். நினைத்ததை கொடுக்க வல்ல தீர்த்தம்
இதைக் கண்டுபிடிக்க சித்தர்கள் மக்களுக்காக பல குறிப்பு களை நூலாக்கி படைத்துள்ளார்கள்
ஆனால் படிப்பவர்தான்யாருமில்லை. கீழ் வரும் பாட்டில் சித்தர்கள் அண்டம் என்பதை
அவர்கள் பல பெயர்களில் அழைக்கின்றனர். ஆனால் அந்தப் பெயர்களெல்லாம் அண்டமில்லை
என்றும் அது பஞ்ச பூதத்தில்ஒன்று என்று முடிக்கிறார். அதையும் மனிதன்
கண்டுபிடிப்பான என்று சொல்லுகிறார்.
அந்த பஞ்ச பூத சரக்குகளை சேகரிப்பது எப்படி என்றும் பல புத்தகங்களில் எழுதி யும்
யிருக் கிறார்கள்


அண்டம்

வளமையென்ற அண்டமென்றால் முட்டையல்ல
மானிடர்கள் மண்டையல்ல உவர் நீரல்ல
இணையான ரோமமல்ல கண்ணீரல்ல
ஈசன் விந்து சூதமென்பார அதுவுமல்ல
துளிரான மூலிகையும் மதுவுமல்ல
சமாதினிலை (ஊ) யூணுப்புத் தானுமல்ல
குணமான சுக்கிலத்தின் கூறுமல்ல
கொடியான தொரு சுண்ணாம்புக் கூட்டந்தள்ளே

தள்ளப்பா உவரல்ல துருசுமல்ல
சவுக்கார மணவேகச் சத்துமல்ல
வில்லப்பா ஆணல்ல பெண்ணுமல்ல
வெடியுப்பு கரியுப்பு விஷநீரல்ல
கொள்ளப்பா ரத்தினமல்ல மலைதானல்ல
கோசமல்ல அஸ்தியல்ல குருவண்டல்ல
என்னப்பா வஸ்துவல்ல சிறுநீரல்ல
ஏதென்றால் பஞ்சப்பூததி லொன்றே

எழுதியவர் : (26-Jan-20, 8:54 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 43

சிறந்த கட்டுரைகள்

மேலே