எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

என்னை பற்றி, 


நான் டிப்ளமோ மின்னணு பொறியாளர். தனியார் நிறுவனம் ஒன்றில் மூன்று வருடங்கள் பணி புரிந்து, தொழில் கற்று கொண்டு, பின் சுயமாக, சென்னை திருவல்லிக்கேணியில், ஜெராக்ஸ் இயந்திரம் விற்பனை, மற்றும் அதனை பழுது பார்த்தல் தொழிலை கடந்த இருபது ஆண்டுகளாக நடத்தி வருகிறேன். தமிழ் மீது எனக்கு ஆறாவது படிக்கும் காலத்தில் இருந்தே காதல் தொடங்கியது. காரணம் எனக்கு தமிழ் சொல்லி கொடுத்த ஆசிரியர் திரு. புலவர் ஆறுமுகம் அவர்கள். மிக அருமையாக தழிழ் பாடம் நடத்துவார். பின் டிப்ளமோ படிக்கும் போது ஏறகுறைய தமிழை மறந்தே விட்டேன் என்று கூட சொல்லலாம். பிறகு வேலை, அதன் பின் வியாபாரம் என்று வாழ்க்கை பயணிக்க, திரும்பவும் தமிழ் மீது அக்கறை, என்னுடைய கைபேசியால் வந்தது. பட்டிமன்றம், கவியரங்கம், விவாதமேடை இப்படி பல தமிழ் அறிஞர்களின் அபார பேச்சு என்னை கவர்ந்தது. மிகவும் ஈர்த்தது. ஞாயிறு மாலை வேளையில் தொலைக்காட்சி பார்பதை தவிர்த்து, தமிழில் எழுத தொடங்கினேன். எழுதுவதற்கான தளத்தை தேடினேன். எழுத்து.காம் என் எண்ணத்தை பூர்த்தி செய்தது. தமிழ் மிக பெரிய சமுத்திரம். நான் கற்ற தமிழ் துளி கூட இல்லை. அந்த துளியை கடலாக நினைத்து ஏதோ எனக்கு தெரிந்ததை எழுதுகிறேன். தொடர்ந்து ஆதரவு தரும் இந்த தளத்தில் உள்ள உறுப்பினர்களுக்கும், மற்றும் கவிதையை படிக்கும் அன்பர்களுக்கும் என் கோடி நன்றிகள். என் எழுத்துகளை உலகறிய செய்த எழுத்து.காம் க்கு என் நன்றிகள். வாழ்க தமிழ். தமிழால் அனைவரும் இனைந்தோம்
 தமிழை காப்போம்.

பாலு
:  திருவொற்றியூர்
================================
: Visit pl 
Read & Shared Balu's  Poems 182--Stories 9 to my friends and relatives .
V.Avudaiappan B.Pharm 
Kadayanallur 

மேலும்

மனப்பித்து

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81

மேலும்

முன்தோன்றிய முன்னோடி

https://www.femina.in/tamil/achievers/life-and-times-of-dr-muthulakshmi-reddy-557.html

மேலும்

ஃபெமினா தமிழ் 

சாதனையாளர்கள்  
https://www.femina.in/tamil/achievers/ayyamittu-unn-10.html

மேலும்

மேல்நாடுகளில் முதியோர்  நல வாரியம் ,முதியோர் பென்ஷன் ,முதியோர் உறைவிடம், முதியோர் மருத்துவ வசதிகள் , முதியோர் போக்குவரத்து சலுகைகள் , முதியோர் விளையாட்டு அரங்கம் ,முதியோர் மன மகிழ் மன்றங்கள், முதியோர் நூலகங்கள் ,நேரில் கண்டுள்ளேன் 


இந்தியாவில் முதியோர் நலத் திட்டங்கள் என்று வருமோ ? முதியோர் இல்லங்கள் தொண்டு நிறுவனங்கள் திறம்பட நடத்த ஆவண செய்வோம் இறைவா முதியோர்களைக் காப்பாற்று !

மேலும்

இந்த தேசம் ஒரு நவீன தேசியமாக நீடிக்கும் வரை இது மெல்ல மெல்ல வளர்ச்சிப்போக்கில்தான் செல்லும் என்று எண்ணுகிறேன். அப்படி உருவாகும் நிதானமான வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி என்று நான் நம்புகிறேன். இந்த நவீன தேசத்தில் எல்லா மதங்களும் ஒரு கருத்துத்தரப்பாக தீவிரமாக செயல்படவேண்டும் என்று விழைகிறேன். எனது இந்தியாவில் இந்துமரபும் பௌத்த சமண மரபுகளும் கிறித்தவ மரபும் இஸ்லாமிய மரபும் ஒவ்வொரு கணமும் உரையாடி தங்களை வளர்த்துக் கொண்டவாறிருக்கும். இந்த நாட்டில் இன்று ஆயிரம் பல்லாயிரம் சிக்கல்கள் இருக்கலாம், ஆனால் இதன் உறுதியான ஜனநாயகம் தன் குறைகளைக் களைந்து மெல்லமெல்ல மேலும் சிறந்த ஒரு சமூகத்தை சென்றடைய முடியும். உலகில் இந்த வாய்ப்புள்ள தேசங்கள் இன்று மிகமிகச் சிலவே உள்ளன. 


தங்கள் படைப்புகளை கடையநல்லூர் விதை நூலக வாசகர் அரங்கில் சமர்ப்பிக்க வருக வருக என நூலகர் சார்பாக அழைக்கிறோம்

மேலும்

கவிகள் திலகம் கம்பன் கண்ட திலகம்! (Post No.6653)

https://tamilandvedas.com/2019/07/20/%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d/

மேலும்

 5:59:04வெள்ளி, ஜூலை 19 2019            


 தமிழக எம்பிக்களுக்கு பாராட்டு விழா நடத்திய டெல்லி தமிழ் சங்கம்mps
தமிழக எம்பிக்களுக்கு டெல்லி தமிழ் சங்கம் பாராட்டு விழா நடத்தியது. இதில், டி.ரவிகுமார் தவிர திமுக மற்றும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் எம்பிக்கள் எவரும் கலந்து கொள்ளவில்லை.

ஒவ்வொரு மக்களவை தேர்தலுக்கு பின்பும் தம் மாநிலத்தில் இருந்து வென்ற எம்.பிக்களுக்கு டெல்லியில் உள்ள பல்வேறு மாநில சங்கங்கள் பாராட்டு விழா நடத்துவது வழக்கமாக உள்ளது.

இந்தவகையில், டெல்லி தெலுங்கு சங்கம் ஜுலை 16-ல் தம் மாநில எம்பிக்களுக்கு பாராட்டு விழா நடத்தி இருந்தனர். இதையடுத்து டெல்லி தமிழ் சங்கம் சார்பில் நேற்று மாலை தமிழக எம்.பிக்களுக்கும் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

மேலும்

வணக்கம் 

 தங்கள் படைப்புகளைத் தொகுத்து அனுப்பினால் நூலகத்தில் வாசகர் வட்டத்தில் சமர்ப்பிக்க விரும்புகிறேன்
 நூலகங்களில் கௌரவ  ஆலோசகராக உள்ளேன் 
நன்றி 
----------
தொடர்புக்கு 

வேலாயுதம் ஆவுடையப்பன் 
248 உலகா பள்ளி  தெரு
 முத்துகிருஷ்ணாபுரம் 
கடையநல்லூர் 
627751
திருநெல்வேலி மாவட்டம் 

 

மேலும்

மேலும்...

மேலே