விஷ்ணு பிரதீப் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : விஷ்ணு பிரதீப் |
இடம் | : திருமங்கலம் |
பிறந்த தேதி | : 21-Apr-1996 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 24-Oct-2014 |
பார்த்தவர்கள் | : 362 |
புள்ளி | : 113 |
நான் விஷ்ணு....பொறியியல் மாணவன் .ஆனால் எனக்கு ஆர்வம் தமிழிலும் வரலாற்றிலும் தான்.என் மனம் எப்போதும் சிறு ஏக்கத்துடனே இருக்கும் ....அந்த ஏக்கம் இதய வாசல் தாண்டும் போது ,என் கைகளில் இருந்து கவிதையாய் இறங்கி தாள்களில் தஞ்சம் அடையும் !!!
அப்பா பேசுகிறேன்..........
என் மடியில் தவழ்ந்த தாயே ,
அழுகாதே ...என் அழகம்மா , உன்
விழி ஈரமானால் என்னிதயம்
தான் தாங்குமோ ....அப்பா
உன்னருகில் தானே இருக்கிறேன்
மற்றவர்களுக்கு தான் தெரியவில்லை
உனக்குமா தாயே ........??
கண்ணை மூடிப்பார் ...என் கண்ணம்மா
உன்முன்னே எப்போதும் நானுண்டு ..
நீ சிந்தும் சிரிப்பில் , அல்லவா
அப்பா வாழ்ந்து கொண்டிருக்கிறேன் ..!!
அழுகாதே ....என் அழகம்மா
அப்பா மீது கோபம் தானே உனக்கு....விடு
சீக்கிரம் வந்துவிடுவேன் உன்னிடத்தில்...
காதலியின் கண்ணீரில் விளைந்த எண்ணங்களாக என் இதயம்... - விஷ்ணு பிரதீப்
முடி மூடிய மார்பினில், தாய்
மடியெனக் கிடக்கிறாள்,.நான்
விழி மூடப்போகிறேன் என்று.....
கொடியெனத் துயரம் உடலெங்கும்
ஓடி உயிர் முழுவதும் நிறையவே ...
பூமிகும் பூக்களுக்கும் ஆன
புவி ஈர்ப்பு அற்றுப்போகவே ...
முடி மூடிய மார்பினில், தாய்
மடியெனக் கிடக்கிறாள்,.நான்
விழி மூடப்போகிறேன் என்று...
அவள் உலகத்தில் உதிக்கும்
ஆதவனை இந்த ஆயலானைக்
கொண்டாள்...அதனாலே
அஸ்தமனம் ஆகிவிடுவேனோ
என அனுச்சனமும் அழுகிறாள் .
என செய்வேன் இறைவா..என்
இறுதி நொடிகளை
நீளும் நினைவாய் ..
தாய்நாடு ..நிலவுப்
பொழுதின் நிழல்களாய்
ஏக்கம்.....யாருக்கும்
தெரிவதில்லை....!!
பாலுக்காக குழந்தையோடு
தாயும் அழுகிறாள்..
கரையேறிய பிணங்களாய்
மானம் மறந்து ,
மீசை மடங்கிப் போன
வாழ்க்கை ....
பசி வரும்போது
உரிமை மயங்கும்
ஏக்கம் ஓங்கும்
ஊக்கம் தொலையும்...
இருந்தும்,
இடுகாட்டில் பூத்த
பூச்செடி யென..
நீளும் நினைவுகளாய்
என் தாய்நாடு ............
- இப்படிக்கு,..
ஓர் அகதி
இந்தியத் திருநாட்டின் 'அக்னிச் சிறகு'
அணைந்து விட்டது ...
ஏய்...மரணமே மற்றொரு முறை.
நிரூபித்து விட்டாய் ...நீ தான்
கடவுளின் பெயரில் இந்த உலகத்தை
ஆட்சி செய்கிறாய் என்று..!!
வாழ்ந்து விட்டுப் போ..உன்
செயல் செழிக்கட்டும் ....இது
இமயத்திற்கு சிற்றெம்பு கொடுக்கும்
வரம்.......!!!!!
நினைவுகளின் நாயகனுக்காய்
இதயத்தை இடம் மாற்றுகிறேன்..
அவன் காதலுக்கு காணிக்கையாய்,
தினம் ஒரு கவி வரைகிறேன்..!
நீ ரசித்து படிக்கும் போது,
உனக்காக எழுதிய வரிகள்
உயிர் கொண்டு எழுகின்றன..
உன் இதழ் வழி ஒலிக்க,
அவை இங்கே - புது
அர்த்தம் பெறுகின்றன...
செய்த தவம் என்ன - இவள்
காதலும் காகிதத்தில் கரையாது,
உரியவன் கை சேர!..
வழக்கு ஒன்றின் விசாரணை நீதிமன்றத்தில் நடந்துகொண்டு இருந்தது. எப்பவுமே தெனாவெட்டாக பேசக்கூடிய ஒருவன் குற்றவாளி கூண்டில் நிற்கிறான்.
நீதிபதி : உன்னை மாதிரி ஆளுங்களாலே இந்தச் சமுதாயத்திற்கு ஒரு உபயோகமும் இல்லை.
குற்றவாளி : இப்படி சொல்லிட்டீங்களே, ஐயா!! என்னை மாதிரி ஆளுங்களாலே தான் இங்க இருக்கும் ஏட்டய்யா, வக்கீலுங்க, இந்தக் கோர்ட்டில் இருக்கும் எல்லோருக்கும், ஏன் உங்களுக்குக் கூட வேலை கிடைச்சிருக்கு.
நீதிபதி : ங்....
காற்றே ...இந்த உலகத்தின் சுவாசமே
உனக்கோர் கடிதம் எழுதுகிறேன்..
எனக்கு செவி சாய்ப்பாயா?
என்னைப் பெற்றெடுத்தவள் வேறாயினும்
உயிர் கொடுத்தவள் நீ தானம்மா...!!!
குழைந்து..கனிந்து பேசுகிறான் என்று
என் மடலை கழித்து விடாதே..!
இதோ நான் சொல்லும் வார்த்தைகளை
காற்றே கடத்திச் செல்வாயா? உம்மகனின்
உயிர் துதினை கொண்டு செல்வாயா..?
காகிதத்தில் மிதக்கும் என் எண்ணங்களை ....
விடலைப் பெண்ணின் நறுமணக் கூந்தல்
கோதி விளையாடும் தென்றலென
கொண்டு செல்லம்மா...!!.மாறாக
உயர்ந்தோங்கிய தென்னைகளை பிய்த்து
எரியும் புயலாக பாய்ந்து விடாதே..!
அவள் தான் ...அதான் உன் மரு
தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு நடாத்தப்படும் கவிதைப்போட்டியின் பரிசு விபரங்கள் !
முதல் பரிசுகள் மூன்று - தலா 1500 ரூபாய்கள் - மொத்தம் ரூ.4500
இரண்டாம் பரிசுகள் மூன்று - தலா 1000 ரூபாய்கள் வீதம் - மொத்தம் ரூ.3000
மூன்றாம் பரிசுகள் மூன்று - தலா 500 ரூபாய்கள் வீதம் - மொத்தம் ரூ.1500
மேலுள்ளவாறு படைப்பாளிகள் ஒன்பது பேருக்கு ஒன்பதாயிரம் ரூபாய்கள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன !
இது தவிர மேலும் பத்து படைப்பாளிகளுக்கு ஆறுதல் பரிசாக பெறுமதியான நூல்கள் வழங்கப்பட தயார் செய்யப்பட்டுள்ளது !
இதன் (...)
பெண்மை ஒரு தவம் ....அது ஆண்மைக்கு
கிடைத்த வரம்....!!
இடையின் மேடுகளை பிளந்து,ரத்தத்தையும்
சதையையும் கிழித்து என்னை ஈன்றாள்-ஒரு
பெண்..என் வாழ்க்கை வானத்தை வரைந்த
விடிவெள்ளி அவள்.....
உரிமைக்கு உறையாமல் போராட்டம்,அழியாத
அன்பு,தலகாணிச் சண்டையில் தொலையாத
வெற்றி,செங்கோள் இல்லாத இனிய ஆட்சி -
இவை எல்லாம் பொது ...
அவள் எனக்கு முன்னால் பிறந்தாலும்
சரி .....இல்லை எனக்குப் பின்னால்
பிறந்தாலும் சரி......!!
அகத்தில் நட்பையும் ...புறத்தில் சிந்தாத
சிரிப்பையும் மலர வைப்பாள் மற்றொருவள்
முகவரியில் மட்டும் மாற்றம் கொண்ட -என்
இரண்டாம் சகோதரி ...
என்னோடு நீயுமில்லை நானுமில்லை
====================================
மல்லிகையோ
மழைத்துளியோ - அதில்
ஏதோ ஒன்றை
இப்போதே வாங்க ...
ஐந்து விரல் நீட்டி
என்றாவது என்னிடம்
ஐம்பது ரூபாயை
அழகாய் கேட்பாயா ..!
கொஞ்சம் கேள் பெண்ணே
வானம் விழுகிறதா பார்க்கிறேன் ..!
அழுகையோ
ஆனந்தமோ - அதை
அப்படியே விட்டு
ஆசையாய் நின்று
கன்னத்தை கிள்ளி
காதலோடு மெல்ல
கண்ணிமை சிமிட்டி
தலைக்கோதி விடுவாயா ..!
மெதுவாய் கோதிவிடு அன்பே
மேகம் முறைக்கிறதா பார்க்கிறேன் ,,!
கோபமோ
கொஞ்சலோ - இவை
இரண்டிலும் வென்று
இதயத்தினுள் சென்று
உயிரோடு கலந்து
உயிராகவே நிலைத்து
உலகில் எந்த