அப்பா பேசுகிறேன்
அப்பா பேசுகிறேன்..........
என் மடியில் தவழ்ந்த தாயே ,
அழுகாதே ...என் அழகம்மா , உன்
விழி ஈரமானால் என்னிதயம்
தான் தாங்குமோ ....அப்பா
உன்னருகில் தானே இருக்கிறேன்
மற்றவர்களுக்கு தான் தெரியவில்லை
உனக்குமா தாயே ........??
கண்ணை மூடிப்பார் ...என் கண்ணம்மா
உன்முன்னே எப்போதும் நானுண்டு ..
நீ சிந்தும் சிரிப்பில் , அல்லவா
அப்பா வாழ்ந்து கொண்டிருக்கிறேன் ..!!
அழுகாதே ....என் அழகம்மா
அப்பா மீது கோபம் தானே உனக்கு....விடு
சீக்கிரம் வந்துவிடுவேன் உன்னிடத்தில்...
நீ கொஞ்சும் பொம்மைகளோடு, தினம்
செய்யும் குறும்புகளோடு, அன்றலர்ந்த
புன்னகையோடு , மனம் மாறா
உன் மழலை யோடு .........அப்பா
இருக்கிறேன்....உன்னோடு பேசிக்கொண்டு ...!
இதோ என் செல்லத்திற்கு , அப்பாவின்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்....
அப்பா பேசுகிறேன்....கேட்கிறதா என் மகளே.....