மாற நினைவுகள்

காதல்
களத்தில் நான்
கவிஞனாகி போனேன்...

இன்றளவும்
வான் வீதியிலே
உல்லாச உலா
உன் நினைவுகள் என்
உள்ளம் வருடையிலே...

என் காதலை
மறந்த நீ
எனது நினைவுகளை
மறக்காது போனது ஏனோ....

முகநூலில்
என் புகைப்படத்தை
நீ பார்வை இடுகையில்
நீ அறியாது லைக் பட்டனை
தொட்ட உனது விரல்கள்
சொல்லியது......

நெருக்கத்தில் தான்
தூரமாகி நிற்கிறேன்
நெஞ்சத்தால் அல்ல....

காலம் கடந்தாலும்
ஈரம் மாறாத என்
கன்னம் வருடும்
கண்ணீருக்கு தெரியும்.....
🌹😭🌹 Samsu 🌹😭🌹

எழுதியவர் : Samsu (22-May-17, 11:04 pm)
Tanglish : mara ninaivukal
பார்வை : 1291

மேலே