சம்சுதீன் - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  சம்சுதீன்
இடம்:  திருநெல்வேலி
பிறந்த தேதி :  21-Mar-1983
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  22-May-2017
பார்த்தவர்கள்:  1178
புள்ளி:  51

என்னைப் பற்றி...

தனிமையில் நானிருக்க சிந்தனை அது என் துணையிருக்க எழுதுகோலை ஆயுதமாக்கி நினைவுகளை எழுத்தாக்கி என்னவர்கள் காண்பதற்கு களத்தில் வைக்கிறேன்.....நன்றி

என் படைப்புகள்
சம்சுதீன் செய்திகள்
சம்சுதீன் - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Mar-2018 10:09 pm

உறவே என் உறவே
என் உயிராய் நீ இருக்க
உதிரமாய் வெளியேறாதே...!!!

உறவின் பிரிவுகளின்
வலியே கொடியதென்பேன்
கருங்கல்லாய் நானிருந்தாலும்
என்னிலே உன்னை சிலை வடித்தேன்...!!!

இமயம் வரை நீ சென்றாலும்
நினைவுகள் மனதில் நிறைந்திருக்கும்
என் கண்ணை மறைத்து நீ இருப்பதால்
மண்ணை நனைக்கும் கண்ணீர் துளிகள்...!!!
✍️Samsu✍️

மேலும்

சம்சுதீன் - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Feb-2018 7:58 pm

குயில் இசை காட்டிலும்
அவளின் குரலோசை இனிமை !

பூந்தளிர் காட்டிலும்
அவளின் புன்னகை அழகே !

மழை சாரல் காட்டிலும்
அவள் அன்பின் தூரல் இதமே !

காமத்தை காட்டிலும்
அவள் காதலே கவிதை !

தேவலோக பெண்ணை காட்டிலும்
அவளே என் தேவதை !

அன்பை தாண்டிய தேடல் இல்லை
அவள் அன்பே எனது எல்லை !
✍️Samsu✍️

மேலும்

சம்சுதீன் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Feb-2018 2:22 pm

நமக்கான நெருக்கம் குறைய
கண்ணீரில் கண்கள் நனைய
அன்பு மட்டும் நிறை குடமாய்
நம்மில் தழும்புகிறது...!!!!

உறவுகள் கூடி உன்னை வாட்ட
வாடிய உன் உணர்வுகளுக்கு
நானும் அன்பெனும் நீரூட்ட
புத்துயிர் பெறுவாய் என் முன்னே...!!!!

காரிய மேகத்தில் ஒளி தந்தவள் நீ
கலைந்து விடும் கனவாக
உன்னை எண்ணமாட்டேன்
நீயே என் உயிராகி விட்டதால்...!!!!

என் உயிராகவும் உணர்வாகவும்
நீயே நெஞ்சம் நிறைந்திருக்க
உயிரற்ற உடலாகி போவேன் அன்பே
நீ என்னை நீங்கி சென்றால்...!!!!

என்னில் நீ இருக்க துயரம் ஏன்
என் கண்மணியே
தளராது தொடர்ந்து நில்
உன்னுடன் நானிருப்பேன்...!!!!

இறுதி வரை உன் நிழலாகவே
தொடர்ந்திருப்பேன்

மேலும்

காற்றுக்கு வேலிகள் இல்லை அது போல் காதலுக்கு முடிவு கிடையாது. பிரிவின் பின்னும் நெஞ்சுக்குள் காதல் மரணம் கிளைகள் விட்டுக் கொண்டு தான் இருக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 22-Feb-2018 6:39 pm
சம்சுதீன் - சம்சுதீன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Feb-2018 6:46 pm

இதழ் தீண்டிய ஸ்பரிசம்
ஈரமான செவ்விதழ்கள்
இதயம் தடதடக்க
இமைகள் படபடக்க
இனம் புரியா சந்தோஷம்...!!!

வான் நிலவில் திருஷ்டி பொட்டாய்
உந்தன் இரு கருவிழிகள்
மின்னலாய் கண் கொய்து போகும்
உந்தன் விழி பார்வைகள்...!!!!

குளிர் கால தென்றலாய்
வருடும் உந்தன் ஈரகூந்தல்
குளிர் காய்ச்சல் வர
உந்தன் இதழ் முத்தம்
இதமான ஸ்பரிசம்..!!!
✍️Samsu✍️

மேலும்

நன்றி நட்பூக்களே 21-Feb-2018 2:17 pm
காதல் என்ற கவிதைக்கு கிடைக்கும் இனிமையான ஹைக்கூ வடிவம் முத்தம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 19-Feb-2018 7:46 pm
அருமை நண்பரே 19-Feb-2018 6:52 pm
சம்சுதீன் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Feb-2018 6:46 pm

இதழ் தீண்டிய ஸ்பரிசம்
ஈரமான செவ்விதழ்கள்
இதயம் தடதடக்க
இமைகள் படபடக்க
இனம் புரியா சந்தோஷம்...!!!

வான் நிலவில் திருஷ்டி பொட்டாய்
உந்தன் இரு கருவிழிகள்
மின்னலாய் கண் கொய்து போகும்
உந்தன் விழி பார்வைகள்...!!!!

குளிர் கால தென்றலாய்
வருடும் உந்தன் ஈரகூந்தல்
குளிர் காய்ச்சல் வர
உந்தன் இதழ் முத்தம்
இதமான ஸ்பரிசம்..!!!
✍️Samsu✍️

மேலும்

நன்றி நட்பூக்களே 21-Feb-2018 2:17 pm
காதல் என்ற கவிதைக்கு கிடைக்கும் இனிமையான ஹைக்கூ வடிவம் முத்தம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 19-Feb-2018 7:46 pm
அருமை நண்பரே 19-Feb-2018 6:52 pm
சம்சுதீன் - சம்சுதீன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Feb-2018 10:02 am

நீ என் ஜீவன்
என்னுல் சுவாசமாய் நீ இருக்க
என்னை நீங்கி நீ சென்றால்
நான் எங்கே உயிர் வழ்வேன் !

உன் கண்ணில் விழுந்தவன்
உன்னை காணா நேரம்
தனிமையில் தவிக்கிறேன் !
✍️Samsu✍️
🌹🌹🌹காதலர் தின வாழ்த்துகள்🌹🌹🌹

மேலும்

நன்றி நட்பே 19-Feb-2018 6:45 pm
தனிமைகள் எங்கும் உந்தன் ஞாபகம் என் அறைச்சுவர்களில் ஓவியம் வரைகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 14-Feb-2018 12:16 pm
சம்சுதீன் - சம்சுதீன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Jan-2018 3:50 pm

நட்புக்கு என்றும்
நன்மதிப்பு தந்திடுவாள்
அன்பு கொண்டவர்களை
இதயத்தில் சுமந்திடுவாள்!

அன்பாய் நான் கண்ட அவதாரம்
தோழமைக்கு அவளே உதாரணம்
சலனம் இல்லா அன்பு கொண்டால்
சாரல் மழையாய் நனைத்திடுவாள்!

இளகிய மனமே அவள்h இயல்பு
இதழ் புன்னகையே அவள் சிறப்பு
தேடி தேடி கோடி வார்த்தைகள் போட்டாலும்
இலக்கியத்தில் கூட வாக்கியம் இல்லை
அவள் அன்பிற்கு அர்த்தம் சொல்ல!

என் அன்பு தோழிக்கு
வாழ்த்து எழுத வார்த்தை தேடிய
இவ்வேளையில் மனமார்ந்த
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
✍️Samsu✍️

மேலும்

நன்றி நண்பா முஹம்மது ஸர்பான் 06-Feb-2018 11:20 am
நன்றி நண்பா இதயம் விஜய் 06-Feb-2018 11:20 am
அன்பிற்கீடேது அன்பேதான். வாழ்த்துகள்.. 28-Jan-2018 6:18 pm
உள்ளங்களில் அன்பு நிலைக்கும் வரை வாழ்க்கை அழகானது. இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 28-Jan-2018 6:10 pm
சம்சுதீன் - சம்சுதீன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Jan-2018 3:55 pm

அன்பு தோழியே
நட்பின் சிகரமான சினேகிதியே

உன் வருகை என் வாழ்வின் வசந்த காலம்
உயரிய அன்பும் உன்னதமான பாசமும்
உன்னிடம் நான் கண்டேன்!

தாய்க்கு இணையான அன்பு தந்து
தனித்தும் பெற்று நீ நின்று
எனது துக்கம் துயங்களில் துணை நின்று
ஆறுதல் தந்த அன்பு தோழி நீ!

துன்பம் எனும் இருள் நீங்கி
சந்தோஷம் எனும் ஒளி வீசட்டும்
என்றெல்லாம் உன்னை நான்
வாழ்த்த வில்லை!

மீளாத துயரம் வந்தாலும்
மீண்டு வரும் குணம் கொண்டு
உறுதியான மனம் கொண்டு
தன்னம்பிக்கையோடு நீ வாழ்கவே!

விலை மதிப்பில்லா உன் அன்பின்
உன்னதம் நான் அறிவேன்
இறுதி வரை உனக்காக தூய அன்போடு தோள் கொடுப்பேன்!

கடந்த கால காயங்களை கடந்து வந

மேலும்

நன்றி நண்பா முஹம்மது ஸர்பான் 06-Feb-2018 11:19 am
தப்பான கண்களுக்கு அன்பான உறவுகள் கூட தவறாக தென்படும் நிகழ்கால உலகில் உண்மையான அன்பை வன்முறையால் கூட வீழ்த்தி விட முடியாது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 28-Jan-2018 6:12 pm
சம்சுதீன் - சம்சுதீன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Jun-2017 4:21 am

கருவறை சுகம்
"""""""""""""""""""""""""""
கடவுளின் தோட்டத்தில்
விளையாடிக்கொண்டிருந்தேன்
சொர்க்க பூஞ்சோலையை
காட்டுகிறேன் என்று சொல்லி
தாயே உன் கருவறையில்
என்னை பிரவேசிக்க செய்தார் கடவுள்....

இருட்டறை என்றாலும் இன்பமாகவே இருந்தேன் முதலில் பயம் என்னை ஆட்கொள்ள பிறகு பழகிக்கொண்டேன்.....

இதமான உனது கருவறையின்
சுகம் வாரி அணைக்கையிலே சந்தோஷமாகவே வளர தொடங்கினேன்....

உன் இன்பத்தில் நானும் சிரித்தேன்
நீ அழுகையிலே மிதந்தேன் நானும்
உன் கண்ணீரில்......

அப்போது தான் உணர்ந்தேன்
நீயே எனக்கான சொர்க்கம் என்பதை
ஆம் நீயே என் அம்மா...

மீண்டும் அந்த குரல் எனக்காக உன்னை தந்த கடவுளின் குரல்

மேலும்

அன்னை அவளை பாதுகாக்க வேண்டியவன் பரிதவிக்க விடுவது அன்னையர் இல்லத்தில்.... 04-Jun-2017 1:47 am
அந்த உலகில் பத்துத்திங்கள் வாழ்க்கை 03-Jun-2017 8:43 am
சம்சுதீன் - சம்சுதீன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Jun-2017 4:25 am

கால் சுவடுகள்

உன் நினைவுகளை
மறந்தவன் என
நினைக்கிறாய் என்னை....

எப்படி மறப்பேனடி பெண்ணே
என் இதயத்தில் நீ வந்து போன
கால் சுவடுகளை கூட பத்திரபடுத்தி வைத்திருக்கிறேன்.....

நீ வந்து போன இதயத்தில்
வேறொருவர் பிரவேசிக்ககூடாது என்பதற்காக.....

🌹🌹🌹🌹Samsu🌹🌹🌹🌹

மேலும்

காதலித்தவனின் இதயத்தில் காதலே சர்வமும் ஆகி போவதால் சில வேளைகளில் சர்வதிகாரி ஆகிப்போகிறான் 04-Jun-2017 1:42 am
இதயத்தை காதலெனும் உணர்வு சர்வாதிகாரி ஆக்குகின்றது 03-Jun-2017 8:35 am
சம்சுதீன் - S UMADEVI அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-May-2017 10:40 am

கண்மணியே .. . . .

உனைப்ப்ரியும்
தருணங்களில்
புலரியின் சிவப்பில்
இரைதேட
பிரியா விடை கேட்டுக்
கெஞ்சும் . .
தாய்ப்பறவையாய் . . . . .

நீ உதிர்த்த வார்த்தைகள்
எனைச்சுற்றி முளைத்த
வார்த்தை வனத்தினுள்
இன்னும் இளம்மொட்டாய்
முதிராமல் .. . .

ஈரத்தலையோடு
பாவாடைக் குடையாக்கி
நீ சுற்றித் தெறித்த
நீர்த்துளிகள்
மழைநின்ற
மாலைநேரத்து
மரநிழலாய்
மனதோரம் . . .

தொண்டை முட்டிய
வெள்ளத்திலும்
காலடி மண்ணை
பிடிதளராது
தலைநிமிர நிற்கும்
மரமாய்
உன்பிடிவாதம் . . .

உன் முதல்
கிறுக்கலை
பச்சை குத்தி
உலகின் சிறந்த
ஓவியமாய்
இன்றும் காண்கிறேன்
என் கை நடுவே . . .

உன் பிஞ்சுக

மேலும்

Nandri kal pala brother Mohammed sarfaan avarkalae 08-Jun-2017 8:23 pm
மனதை எங்கெங்கோ அழைத்துப் போகிறது கவிதை 06-Jun-2017 4:40 pm
Dear brother suresh chidambaram thangal vimarsanangal ku mikka நன்றி 26-May-2017 6:50 pm
உண்மைய சொல்லிடுங்க.. கலாதேவிக்கும் உமாதேவிக்கும் என்ன ஒப்பந்தம்? இருந்தாலும் அந்தம்மாவுக்கு இவ்வளவு வஞ்சனை இருக்க கூடாது.. காலாரசனை மொத்தமாய் தங்களுக்கே கொடுத்து விடுவதா என்ன?? 26-May-2017 5:52 pm
சம்சுதீன் - சம்சுதீன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-May-2017 11:34 pm

உன் சோகம் ஊர்
அறியாது....

சோகத்திற்கு தான்
முகம் அறியாது...

துக்கம் துக்கம் என
நீ சுமந்தால் அது
உனக்கு சுமை தான்...

தூக்கி எறிந்து
நீ நடந்தால் அது
உன் திறன் தான்....

கவலை இல்லாத
வாழ்க்கையும் இல்லை....

மரணம் இல்லாத
மனிதனும் இல்லை.....

பிரிந்து போன
உறவுகள் புரிதல்
இல்லாதவை.....

புரிந்து
கொண்ட உறவுகள்
புனிதமானவை.....
🌹🌷🤝🤝🤝Samsu🤝🤝🤝🌷🌹

மேலும்

நன்றி நண்பரே mohamed sarfan 04-Jun-2017 2:01 am
மறுப்பில்லா உண்மைகள் 03-Jun-2017 9:06 am
பார்வையிட்ட அனைவருக்கும் நன்றிகள் 29-May-2017 1:24 am
நன்றிகள் கோடி சகோதர் karthikrasa, சகோதரி s umadevi 29-May-2017 1:22 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி
சுரேஷ் சிதம்பரம்

சுரேஷ் சிதம்பரம்

பென்னகோணம், பெரம்பலூர் மா
கவிஞர் செநா

கவிஞர் செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு
பிரகாஷ் வ

பிரகாஷ் வ

நாமக்கல்

இவர் பின்தொடர்பவர்கள் (6)

அருண்

அருண்

இலங்கை
பிரகாஷ் வ

பிரகாஷ் வ

நாமக்கல்

இவரை பின்தொடர்பவர்கள் (6)

பிரகாஷ் வ

பிரகாஷ் வ

நாமக்கல்
அருண்

அருண்

இலங்கை
கவிஞர் செநா

கவிஞர் செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே