வலிகள்
உறவே என் உறவே
என் உயிராய் நீ இருக்க
உதிரமாய் வெளியேறாதே...!!!
உறவின் பிரிவுகளின்
வலியே கொடியதென்பேன்
கருங்கல்லாய் நானிருந்தாலும்
என்னிலே உன்னை சிலை வடித்தேன்...!!!
இமயம் வரை நீ சென்றாலும்
நினைவுகள் மனதில் நிறைந்திருக்கும்
என் கண்ணை மறைத்து நீ இருப்பதால்
மண்ணை நனைக்கும் கண்ணீர் துளிகள்...!!!
✍️Samsu✍️