இன்றையக் கல்வி
அறிவியல் வளர்ந்தது,
ஆனந்தம் பெருகியது,
இயற்கை அழிந்தது,
இனிமை குறைந்தது,
தொடுவிரலில் தெரிகிறது உலகம்,
தேடிக் கண்ட தேன் சுவை மறைந்தது,
மதிப்பெண்கள் வாரிக் குவிக்கிறது,
உண்மை மதிப்பை அறிய மறுக்கிறது,
உலகத்தையே வலைத்தளத்தில் நட்பாக்கியது,
ஊனமாய் ஒரு இடத்தில் கட்டிப்போட்டது,
நாட்டம் கொண்டு மேல்நாடு சென்றது,
நன்னெறிகளை நன்கறிய மறந்தது,
கேட்டதெல்லாம் சில நொடியில் கிடைத்தது,
கலாச்சாரத்தைக் காற்றில் பறக்கவிட்டது,
செல்வத்தை தேடிச் சென்று குவித்தது,
முன்னோர் சொன்ன வேதமெல்லாம் மறந்தது,
சோம்பேறியாய் மாறிவிட்ட நாளில்
சோறுப் போடும் விவசாயியை மறந்து,
நங்கை மீது நாட்டம் கொண்டு சென்றது,
நாட்டின் மீது பற்று கொள்ள மறந்தது,
வேகமாய் சென்று கொண்டிருக்கிறது,
வேதனையைத் தேடிக் கொண்டு செல்கிறது,
பட்டம் பெற்று பதக்கம் பல பெறுகிறது,
பண்பு எதுவென நெஞ்மது மறக்கிறது,
தேவையென்றால் தேடிக் கொண்டுச் செல்கிறது,
தேவை முடிந்தப்பின் தூக்கி காற்றில் எறிகிறது,
பணம் காட்டும் கல்வி இன்று
குணம் கற்றுக்கொடுப்பதில்லை
பட்டம் தரும் கல்வி இன்று
நற்பண்பை வளர்க்க உதவுவதில்லை
ஒன்றுபடுவோம்! உயிர்த்தெழுவொம்! உன்னதமடைவொம்!