அவள்

குயில் இசை காட்டிலும்
அவளின் குரலோசை இனிமை !

பூந்தளிர் காட்டிலும்
அவளின் புன்னகை அழகே !

மழை சாரல் காட்டிலும்
அவள் அன்பின் தூரல் இதமே !

காமத்தை காட்டிலும்
அவள் காதலே கவிதை !

தேவலோக பெண்ணை காட்டிலும்
அவளே என் தேவதை !

அன்பை தாண்டிய தேடல் இல்லை
அவள் அன்பே எனது எல்லை !
✍️Samsu✍️

எழுதியவர் : சம்சுதீன் (28-Feb-18, 7:58 pm)
சேர்த்தது : சம்சுதீன்
Tanglish : aval
பார்வை : 127

மேலே