காதலே என் காதலே
காதலே என் காதலே,
என்னை என்ன என்னவோ செய்கின்றாய்,
விழிவழியாக வந்து என்னை ஆள்கின்றாய்,
காகிதமாக நானிருந்தேன்
மையாக வந்து கவிதையாக்கினாய்,
காற்றாக நானிருந்தேன்
குழலாக வந்து இசையாக்கினாய்,
எந்த வலியுமின்றி இதயத்தை மாற்றினாய்,
எந்த சிறகுமின்றி வானில் பறக்கவைத்தாய்,
இனி
உயிர்வளியாக நீடிப்பாயா? இல்லை
உயிர்வலியாக மாறிவிடுவாயா?