கருவறை சுகம்
கருவறை சுகம்
"""""""""""""""""""""""""""
கடவுளின் தோட்டத்தில்
விளையாடிக்கொண்டிருந்தேன்
சொர்க்க பூஞ்சோலையை
காட்டுகிறேன் என்று சொல்லி
தாயே உன் கருவறையில்
என்னை பிரவேசிக்க செய்தார் கடவுள்....
இருட்டறை என்றாலும் இன்பமாகவே இருந்தேன் முதலில் பயம் என்னை ஆட்கொள்ள பிறகு பழகிக்கொண்டேன்.....
இதமான உனது கருவறையின்
சுகம் வாரி அணைக்கையிலே சந்தோஷமாகவே வளர தொடங்கினேன்....
உன் இன்பத்தில் நானும் சிரித்தேன்
நீ அழுகையிலே மிதந்தேன் நானும்
உன் கண்ணீரில்......
அப்போது தான் உணர்ந்தேன்
நீயே எனக்கான சொர்க்கம் என்பதை
ஆம் நீயே என் அம்மா...
மீண்டும் அந்த குரல் எனக்காக உன்னை தந்த கடவுளின் குரல்
மீண்டும் அந்த குரல் கேட்கையிலே
சந்தோஷம் ஆனால் அந்த சந்தோஷம் நீண்ட நேரம் நிலைக்காது போனது......
ஆம் மீண்டும் வேறு உலகத்தை காட்ட போவதாக சொன்னதால் அழுதேன் ஆர்பரித்தேன் ஒரு பயனுமில்லை....
அமைதி நிறைந்திருந்த இருட்டறையில் வழக்கத்திற்கு மாறானமாற்றங்கள் அப்போதே உணர்ந்தேன்.....
கடவுள் சொன்னது நடக்க போகிறது என்பதனை தீராத கோவம் கொண்டேன் கடவுளின் மீது.....
சப்தனாடியும் அடங்கி கண் திறக்கையில்
விசித்திரனாம உருவங்கள் சூழ்ந்து நிற்பதை
உணர்ந்தேன் சிரிப்பும் கேலியும் கிண்டலும்
விளையாட்டாக போனது அவர்களுக்கு எனது பிறப்பு......
பிறந்தேன் வளந்தேன் பயின்றேன்
பன்முகம் கொண்டவர்களையும் கண்டேன்...
லாபம் இன்றி எதையும் செய்து விடாதவர்களுக்கு மத்தியில்
எவ்வித எதிர்பார்ப்பின்றி என்னை வாரியணைத்த தாயே உன் கருவறையின்
பிரவேசம் மீண்டும் கிடைக்காதா என ஏங்குகிறேன்.....
அன்பு மகன்
Samsu