இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் தம்பி

எனக்கு பின் பிறந்ததினால் அவன் என் தம்பி ...
ஆனால் அன்பில் அவன் என் தாய் ...

அவன் வளர்ந்தாலும் எப்பொழுதும் எனக்கு சிறுபிள்ளை தான் ...
உன்னை சுமக்கவில்லை என்றாலும் நீயும் என் பிள்ளை தான் .....

எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டான் ....அதே போல் யாரையும் இகழ மாட்டான் .....
எல்லாம் வல்ல இறைவனுக்கு உண்மையானவன் ...
இறைவனின் அருளும் உம்மா வாப்பாவின் ஆசிகளும் உனக்கு ஏணிப் படிகளாகும் ....
புத்துணர்ச்சியோடு இருப்பான் ...
நன்றாக கலாய்ப்பான் ....
எல்லோரையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வான் .....

என் தம்பிக்கு
இன்று பிறந்த நாள் ...
மீண்டும் மீண்டும் மலர்ந்து விடு மலர்போல் ...
தமிழ் போல் செழித்து வாழ் என் தம்பி .....

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் தம்பி .....

எல்லா புகழும் இறைவனுக்கே .....

குறிப்பு :
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் மா ...
இன்று பிறந்தநாள் பிழைத்து போகட்டும் ...
ஆனால் இவன் கலாய்ப்பானே ..

உன் அக்கா ~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (3-Jun-17, 11:12 am)
பார்வை : 27536

மேலே