தோழிக்கு பிறந்த நாள்

அன்பு தோழியே
நட்பின் சிகரமான சினேகிதியே

உன் வருகை என் வாழ்வின் வசந்த காலம்
உயரிய அன்பும் உன்னதமான பாசமும்
உன்னிடம் நான் கண்டேன்!

தாய்க்கு இணையான அன்பு தந்து
தனித்தும் பெற்று நீ நின்று
எனது துக்கம் துயங்களில் துணை நின்று
ஆறுதல் தந்த அன்பு தோழி நீ!

துன்பம் எனும் இருள் நீங்கி
சந்தோஷம் எனும் ஒளி வீசட்டும்
என்றெல்லாம் உன்னை நான்
வாழ்த்த வில்லை!

மீளாத துயரம் வந்தாலும்
மீண்டு வரும் குணம் கொண்டு
உறுதியான மனம் கொண்டு
தன்னம்பிக்கையோடு நீ வாழ்கவே!

விலை மதிப்பில்லா உன் அன்பின்
உன்னதம் நான் அறிவேன்
இறுதி வரை உனக்காக தூய அன்போடு தோள் கொடுப்பேன்!

கடந்த கால காயங்களை கடந்து வந்தோம்
உன் பிறந்த நாளில் மறந்தும் மன்னித்து விடு
நிண்ட ஆயுளும் நிறைந்த செல்வமும்
நீ பெற்று நீடூழி நீடூழி நீ வாழ்கவே!
✍️Samsu✍️

எழுதியவர் : Samsu (28-Jan-18, 3:55 pm)
பார்வை : 158

மேலே