காதலியின் கண்ணீரில் விளைந்த எண்ணங்களாக என் இதயம் -

காதலியின் கண்ணீரில் விளைந்த எண்ணங்களாக என் இதயம்... - விஷ்ணு பிரதீப்
முடி மூடிய மார்பினில், தாய்
மடியெனக் கிடக்கிறாள்,.நான்
விழி மூடப்போகிறேன் என்று.....
கொடியெனத் துயரம் உடலெங்கும்
ஓடி உயிர் முழுவதும் நிறையவே ...
பூமிகும் பூக்களுக்கும் ஆன
புவி ஈர்ப்பு அற்றுப்போகவே ...
முடி மூடிய மார்பினில், தாய்
மடியெனக் கிடக்கிறாள்,.நான்
விழி மூடப்போகிறேன் என்று...
அவள் உலகத்தில் உதிக்கும்
ஆதவனை இந்த ஆயலானைக்
கொண்டாள்...அதனாலே
அஸ்தமனம் ஆகிவிடுவேனோ
என அனுச்சனமும் அழுகிறாள் .
என செய்வேன் இறைவா..என்
இறுதி நொடிகளை இயற்கை
எண்ணிக் கொண்டிருக்கிறதே ...
என்னவளே ..இல்லை இனி
இறைவனவள் நீ....
உயிரானவளே என் உயிர்
பிரிந்துவிட்டது ..நீ அள்ளித் தந்த
காதல் தான் பிரிய மறுக்கிறது ..!!
உன்னவன் இறக்கவில்லை ..உனக்காக
வந்தவன் தான் இறக்கப் போகிறான்
என்பதை நினைவில் ஏற்று....!
உன் விழிநீர் என் குற்றுயிர் க்கு
உத்தரம் வைக்கிறது...காலனும்
உன் காதலைக் கண்டுதான்
அஞ்சு கிறான் தெரியுமா..
அவனோடு உடன்வருவதாக
சத்தியம் கொடுத்துவிட்டேன்
என்னை மன்னித்து அவனோடு
அனுப்பு காதலியே..
கவிதை தான் நம் காதலின்
பாலம் என்பாயயே...அக்கவிதை
கொண்டு ஆயிரம் மாற்றம் செய்..
அடிமைக் கோடுகளை ஆற்றுப்
படுத்து..உண்மைக் காதலினை
ஆராதி..சமூக அவலங்களை
உடைத்தெறி...ஏழை முகங்களில்
ஆனந்தம் பொங்கச்செய் ...இதுவே
உன் காதலனின் கடைசி
ஆசை....எனக்காக
அழுது வாடாதே நறுமலரே ....
உன் பிள்ளையாக பிறக்கும்
பாக்கியத்தினை நம் காதல்
எனக்கு அளிக்கும் .......!!!