என்னோடு நீயுமில்லை நானுமில்லை - இராஜ்குமார்

என்னோடு நீயுமில்லை நானுமில்லை
====================================

மல்லிகையோ
மழைத்துளியோ - அதில்
ஏதோ ஒன்றை
இப்போதே வாங்க ...
ஐந்து விரல் நீட்டி
என்றாவது என்னிடம்
ஐம்பது ரூபாயை
அழகாய் கேட்பாயா ..!

கொஞ்சம் கேள் பெண்ணே
வானம் விழுகிறதா பார்க்கிறேன் ..!

அழுகையோ
ஆனந்தமோ - அதை
அப்படியே விட்டு
ஆசையாய் நின்று
கன்னத்தை கிள்ளி
காதலோடு மெல்ல
கண்ணிமை சிமிட்டி
தலைக்கோதி விடுவாயா ..!

மெதுவாய் கோதிவிடு அன்பே
மேகம் முறைக்கிறதா பார்க்கிறேன் ,,!

கோபமோ
கொஞ்சலோ - இவை
இரண்டிலும் வென்று
இதயத்தினுள் சென்று
உயிரோடு கலந்து
உயிராகவே நிலைத்து
உலகில் எந்தன்
உணர்வாக நுழைவாயா ..!

நரம்போடு நகர்ந்துவிடு அழகே
கவிதை பிறக்கிறதா பார்க்கிறேன் ..!

பெண்ணே ..
என்னோடு நீயில்லை
ஆதலால் தான் என்னவோ
என்னோடு நானுமில்லை ..

- இராஜ்குமார்

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (30-Oct-14, 1:45 pm)
பார்வை : 619

மேலே