என் காதல் சாகும் நிலை வருமோ

ஒரு நொடி உன்னை நினைக்க
எப்படி என்னை மறக்க
என் கவிதைகள் காத்திருக்க
எப்படி என் காதலை நான் மறைக்க

காதல் விடுகதைபோல்
என் பயணம் தொடர்வதால்
உன் மௌனம் தடைக்கல்லாய்
என் காதலை வாட்டுதடி ....

கனவுகள் பிழையல்ல
ஆசையும் குறையல்ல
சம்மதம் சொல்லாமல்
காதலை தாமதித்தால்

சாகும் நிலை வருமோ
என் காதல் சாகும் நிலை வருமோ

எழுதியவர் : ருத்ரன் (30-Oct-14, 1:29 pm)
பார்வை : 74

மேலே