உன்னை நினைக்க காரணம்
உறங்க போகும் முன்
உன்னை நினைக்க காரணம்
என் காதல் தேவதை
என் கனவில் நீ வரணும்
காணும் கனவிலும்
காதல் சொல்லவே
தொடரும் தயக்கமே
காணும் மயக்கமே
என் கனவினில் நீ
மறுத்திட சாத்தியம் குறைவுதான்
என்றானபோதும் ...
என்னுள் தயக்கம் மட்டும்
என்றும் தொடருமே