காற்றே உனக்கு கடிதம் எழுதுகிறேன்
காற்றே ...இந்த உலகத்தின் சுவாசமே
உனக்கோர் கடிதம் எழுதுகிறேன்..
எனக்கு செவி சாய்ப்பாயா?
என்னைப் பெற்றெடுத்தவள் வேறாயினும்
உயிர் கொடுத்தவள் நீ தானம்மா...!!!
குழைந்து..கனிந்து பேசுகிறான் என்று
என் மடலை கழித்து விடாதே..!
இதோ நான் சொல்லும் வார்த்தைகளை
காற்றே கடத்திச் செல்வாயா? உம்மகனின்
உயிர் துதினை கொண்டு செல்வாயா..?
காகிதத்தில் மிதக்கும் என் எண்ணங்களை ....
விடலைப் பெண்ணின் நறுமணக் கூந்தல்
கோதி விளையாடும் தென்றலென
கொண்டு செல்லம்மா...!!.மாறாக
உயர்ந்தோங்கிய தென்னைகளை பிய்த்து
எரியும் புயலாக பாய்ந்து விடாதே..!
அவள் தான் ...அதான் உன் மருமகள்
அதனை தாங்கிக் கொள்ளமாட்டாள்...!
அவளுக்கும் எனக்குமிடையே காற்றே..இப்பொது
நீ மட்டுமே இருக்கிறாய் ...உன்னைத் தவிர பந்தம்
என்று சொல்ல சொந்தமில்லை எங்களுக்கு..!
நினைவின் அலைகளை ஊஞ்சலாட்டி, எல்லாப்
பசுமைகளையும் திரட்டி,நம்பிக்கைப் பூக்களை
விதைத்து...காற்றே உனக்கு காதலிடமிருந்து
கடிதம் கொணர்ந்துல்லேன்...!
மொட்டை மாடி திரையினுள், கட்டைக் கட்டிலின்
காலில் சிறைப் பட்டுக் கிடக்கிறாள் உம்மருமகள்.!!
ஓயாத அலைகளினை கரையிடம் சேர்த்து..
நீயே ...திரும்பப் பெற்று வருவதுபோல்,
காற்றே....
இதோ, என் கடிதத்தினை அவளிடம்
சேர்த்துவிட்டு ..பதிலாக அவளின்
பூவிதழ்களின் மொட்டுச் சிரிப்பினை
எடுத்து வா..!!
இங்கே,என் கைகளில் உனக்கான கடிதம்
எடுத்துச் செல்...
அக்கரை விட்டு இக்கரை வந்து ,என்
மனக்கறை துடைப்பாயென உன் பிள்ளை
உனக்காக காத்திருக்கிறான் .....!!!