எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

​அனுபவத்தின் குரல் - 52 ---------------------------------------​ தற்போது சில...

  ​அனுபவத்தின் குரல் - 52
---------------------------------------​


தற்போது சில தொலைகாட்சி ஊடகங்களிலும் நாளிதழ் சிலவற்றின் வாயிலாக நகர்ப்புற பகுதிகளில் சில குறிப்பிட்ட இடங்கள் மற்றும் கிராமப்புற பகுதிகளில் பல்வேறு இடங்களிலும் உள்ள பள்ளிக்கூடங்கள் இன்றைய நிலையை அறிய முடிகிறது . மாநகராட்சியாக இருந்தாலும் சரி , நகராட்சி ,பஞ்சாயத்து மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள் ஆனாலும் சரி , பள்ளிக்கூடங்களை சரிவர நிர்வகிப்பதும் இல்லை . அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாத கட்டடங்களும் கீற்றுக் கொட்டகைகளும் மட்டும் காண முடிகிறது . இன்னும் குறிப்பாக கூற வேண்டுமானால் சில பள்ளிக்கூடங்களில் கழிப்பறை வசதியும் இல்லாமல் மாணவ மாணவிகள் தவிக்கும் காட்சியை பார்க்க முடிகிறது . பலர் நேரில் கண்டு கூறியதும் உண்டு . பல இடங்களில் கிராமங்களில் கட்டிடமும் இல்லாமல் , கொட்டகையும் இல்லாமல் மரத்தடியின் கீழே நடக்கின்ற வகுப்புகளையும் பார்க்க முடிகிறது . நாடு சுதந்திரம் அடைந்து பல வருடங்களை கடந்தும் , விஞஞானம் வளர்ச்சி அடைந்தும் , வல்லரசு நாடு என்று கூறிக் கொண்டும் இந்த அவல நிலை தொடர்வது வெட்கக்கேடானது . மிகவும் வ்ருத்ததிற்கு உரியது .மருத்துவ வசதியும் கல்வி கற்க தேவையான அடிப்படை வசதியும் செய்து தர வேண்டிய , இன்னும் சொல்லப் போனால் இலவசமாக வழங்க வேண்டிய அரசாங்கங்கள் அதில் கவனம் செலுத்தாமல் இருப்பதும் அதை செய்து முடிக்காமல் இருப்பதும் கண்டனத்திற்கு உரியது .

தனியார் பள்ளிகளும் , கல்லூரிகளும் இன்று மேல்தட்டு மக்களுக்கு மட்டுமே உள்ளது . அவர்கள் ஈட்டுகின்ற கோடிகோடியாக பணத்தில் பத்தில் ஒரு பகுதி கூட ஏழை எளிய மக்களின் கல்விக்கென செலவிடப்படாமல் இருக்கிறது . விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சில பெரிய கம்பெனிகளைத் ( Corporate ) தவிர மற்ற அனைத்து நிறுவனங்களும் வறுமையில் உழலும் சமுதாயத்திற்கென எந்த உதவியும் செய்வதில்லை என்பது கண்கூடு . ஆனால் அரசாங்கம் அவர்களுக்குத்தான் எல்லா விதத்திலும் உதவிகள் செய்கிறது . அவர்கள் சொல்வதை , அவர்களுக்கு சாதகமாக சட்டங்களும் இயற்றுகிறது . இதில் அதிகம் பாதிக்கப்படுவது நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்கள்தான் என்பதை யாரும் மறுக்க முடியாது .

மாட மாளிகைகளில் வாழும் சீமான்கள் , கோபுரங்கள் போல வீடுகளில் வசிக்கும் குபேரர்கள் , பண முதலைகள் , பெரிய தொழிலதிபர்கள் மற்றும் கொட்டிக்கிடக்கும் பணத்தில் படுத்துப் புரள்கின்ற அரசியல்வாதிகள் , புல்வெளியைத் தொடாமலேயே விண்வெளியில் மட்டுமே பயணம் செய்பவர்கள் இன்னும் வசதி பல்வேறு வசதிகள் படைத்த கோடீஸ்வரர்கள் அனைவரும் மனமுவந்து இடிந்து கிடைக்கும் பள்ளிகளை சீரமைத்ததால் , அடைப்படை தேவைகளை செய்து கொடுத்தால் , வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்கள் கல்வி பெற வழிவகுத்தால் வல்லரசு நாடு என்று சொல்வதைவிட , கல்வியரசர்கள் நிறைந்துள்ள நாடு என்று போற்றப்படும் . நாடும் இமயமளவு புகழ் பெறும் என்பதில் ஐயமில்லை .


பழனி குமார்  

நாள் : 18-Dec-17, 11:00 pm

மேலே