தேவி, சினிமா மெயில்,தினமலர் சுனிதா, கமலம், மாலைமுரசு, குங்குமம் இதழ்களில எழுதியுள்ளேன். கவிதைகள் எழுத ஆர்வம். வேளாண்மை பொறியியல் துறையில் கண்காணிப்பாளராக பணி புரிந்தேன்.புனை பெயர் அம்பை சுதர்சனன்.
தனிப்பட்ட அறிவுரை வந்ததால் விரோதமில்லை என்பதை விளக்கினேன். இதிலும் விவாதம் வேண்டுமா?
இப்படி செய்தால் இன்றைய கால கட்டத்திற்கு ப்ரிச்சனை வராது என்பது ஒரு வகை. இதில் உள்ள கட்டுப்பாடுகளின் எல்லை கோடுகள் விரிவடைய வேண்டும் என்பது ஒரு வகை.
வேண்டும் என்றே பகைமையை உருவாக்கி அதில் குளிர் காய நினைப்பவருக்கு எங்கள் ஆதரவும் நிச்சயம் இருக்காது. 19-Jan-2015 11:44 am
* நானும் என்ன விரோத மனப்பான்மையிலா எழுதுகிறேன்?
** எழுத்தாளனுக்கு எழுத்துச் சுதந்திரம் வேண்டும் என்பதில் எனக்கும் மாற்றுக் கருத்துக் கிடையாது.
*** ஆனால் என்ன, தணிக்கையோடு கூடிய திரைப்படம் வேண்டுமென்கிறேன் நான்;
சிலர் தணிக்கையே கூடாது என்கின்றனர்.
இங்கேதான் நான் மாறுபடுகிறேன்.
எழுத்தாளன் தன் எழுத்தைத் தானே தணிக்கை செய்துகொள்ள வேண்டும்.
**** ஒரு காலத்தில், ஒரு வட்டாரத்தில், ஒரு சாதியினர், இன்னொரு சாதியினரைத் தாழ்ந்த சாதியினர் என்று முத்திரை குத்தி, அத் தாழ்ந்த சாதிப் பெண்கள் இடுப்பிற்கு மேல் துணியே அணியக் கூடாது என்று கட்டளையும் இட்டுப், பார்த்துக் கேவலப்படுத்தி இரசித்தனர்.
இந்தச் சரித்திர உண்மையை ஓர் எழுத்தாளன், ஆர்வமுள்ளவர்கள் மட்டுமே படிக்கும் கட்டுரையில் சற்று விஸ்தாரமாக எழுதினால் எதிர்ப்பு வராது.
ஆனால், வெகுஜனங்கள் படிக்கும் நாவலிலோ, கதையிலோ, இன்ன ஊரில், இந்தக் காலத்தில் இந்த ஜாதியினர், இந்த ஜாதியினரை, இப்படிக் கேவலப்படுத்தினர் என்று குறிப்பிட்டுச் சொல்வதோடு மட்டுமில்லாமல், அவர்கள் குனிந்தால் கோளம் தெரிந்தது; நிமிர்ந்தால் நெஞ்சம் தெரிந்தது என்று தனது கை வண்ணத்தையும் சேர்த்துக் காட்டினால், அந்தத் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு இரத்தம் கொதிக்குமா, கொதிக்காதா?
இப்படிப்பட்ட கருத்தை சாமான்ய மக்கள் முன் சொல்லும் போது நாசூக்காக நாகரீகமாகச் சொல்ல வேண்டும் எழுத்தாளன்.
இதுதான் என் கருத்து.
இதைப் புரிந்து கொள்ளாமல், இதைச் சொல்லக் கூடாதா, எழுத்தாளனின் சுதந்திரத்தையே பறிககிறாயா என்றால், நான் என்ன சொல்வது? ... 18-Jan-2015 8:44 pm