காட்சிப்பிழைகள் 20 கே இனியவன்

காட்சிப்பிழைகள்....................( காதல் காட்சிப்பிழைகள்)

காதல்
ஒரு மந்திர கோல் .....
இரண்டு இதயங்களை ....
ஒன்றாக்கி விடும் ....!!!

நெற்றியில் ...
குங்கும பொட்டு.....?
அப்பாடா - சாமி ....
கும்பிட்டு வருகிறாள் ....!!!

தேவனிடம் ....
பாவ மன்னிப்புக்கேட்கிறாள் ....
என்னிடமும் கேட்பாள் .....!!!

^^^

கனவு
நிஜத்தில் நிறைவேறாத ...
ஆசைகளை நிறைவேற்றும் ....
நீர்க்குமிழி .....!!!

திடுக்கிட்டு எழுந்தாள் ....
தாலியை கண்ணில் வணங்கி...
என்னை பார்த்தாள் ....!!!

இன்னும்
சற்று தூங்கியிருந்தால் ....
சொர்கத்தை.........
பார்த்திருப்பேன்....!!!

^^^

நீ என்னை ....
காதலிக்கும் வரை ...
உதடு அசைவெல்லாம் ...
என் பெயர் தான் ....!!!

அவள்
தந்த புத்தகத்துக்குள் ......
மடித்த காகித துண்டு ....
இன்ப அதிர்ச்சி ....
படித்துப்பார்த்தேன் ...
அட வெறும்
பாட சிறு குறிப்புகள் ....!!!

உன் அருகில் ....
என் உருவ அளவில் ....
எவர் வந்தாலும் ...
நெஞ்சு படபடக்குது ....!!!

^^^

என் வீட்டில் -நீ
உன் வீட்டில் - நான்
இன்பமாய் வாழ்கிறோம்
நம் பெற்றோர் ....
திருமணத்துக்கு முன் ...
எப்படி சம்மதித்தனர் ....?

பூமி தட்டை.....
கோளமாக இருந்திருந்தால் ...
கடல் நீரெல்லாம் ....
உன்னைப்போல் வழிந்து ...
ஓடியிருக்கும் .....!!!

அஞ்சியவன் கண்ணுக்கு....
அசைவதெல்லாம் பேய் ....
வீட்டுக்கு கல்யாண தரகர் ....
வந்துபோனபோது .....!!!

^^^

காட்சிப்பிழைகள்....................( பலவகை காட்சி பிழைகள்)

தப்புப்பண்ணிவிட்டேன் ....
அக்கறையில் நின்றிருந்தால் ....
உன்னை தொட்டிருப்பேன் ...
இக்கரையில் நின்று ....
தவிக்கிறேன் - வானமே ....!!!

@@@

கண்ணாடியில் தெரியும் ...
எழுத்துப்போல் -அவள்
வலமிருந்து இடமாக இருக்கிறாள் ...
நான் மேலிருந்து ......
கீழாக முழிக்கிறேன் ....!!!

@@@

காதல்
ஒரு கழுகு ....
அருகில் இருந்தால் ...
பிரமாண்டம் ....
தொலைவில் இருந்தால் ....
கடுகு .....!!!

@@@

கயிற்றை மிதித்து ...
பாம்பு என்று கத்தினான் ....
நாக தோஷ பூஜை ....
நடக்கிறது .....!!!

@@@

அறையிலிருந்து ....
உருக்குலைந்து வந்தாள்
மகள் ......!
பதறி அழுதாள் -தாய் ...!
திரெளபதி வேஷத்தின்
ஒத்திகை அம்மா ....!!!

@@@

மூக்கும் முழியுமாய் ...
இருக்கிறாள் - எனக்கு ...
பிடிக்கவில்லை ....
மகனே .....!!!

அம்மா

மூக்கு கண்ணாடியால் பார்
பூதக்கண்ணாடியால் பாராதே ...!!!

@@@

பூமி தட்டை ....
அறிஸ்ரோட்டில் தத்துவம் ....
ஆயிரம் ஆண்டுகள் ...
நிலைத்திருந்தது ....!

பூமி கோளவடிவம் ....
கலிலியோ கலிலி ...
அடித்தே கொன்றார்கள் ...
யதார்த்த வாதியை ....
விஞ்ஞானத்தின் காட்சிப்பிழை ....!!!

@@@

காட்சிப்பிழைகள் இருவகைப்படும்

(1) அல் நோக்கல் - காட்சிப்பிழைகள்
(2) வழு நோக்கல்(திரிபுரக்காட்சி ) - காட்சிப்பிழைகள்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (31-Dec-15, 4:17 am)
பார்வை : 454

மேலே