காட்சிப் பிழைகள்19

            கசல் கவிதைகள்.....19

நீ ஆடையாக இருக்கிறாய்
நான் நூலாக இருக்கிறேன்.. என்னுள்
சிக்காமல் நீ சிக்கிக்கொண்டு நான்.

கை பேசியில் அழைத்தேன் ஒவ்வொரு முறையும்
பேசியது நான் நீ பேசியது மவுனம்.

நீ பூ சூடிக் கொண்டு போனாலும் உன் வாசம்
என் நாசி வழி சுவாசித்துக் கொண்டிருக்கும் நீங்காமல்..

காதலை அழைக்க சிக்கிக்கொண்டோம்
நீயென்றும் நானென்றும்..
அது வந்ததும் இருதுருவங்களாகிப் போனோம்.

நான் உன்னோடு வம்பு பேசவரவில்லை
அன்போடு வாழத்தான் அழைக்கிறேன்.

நீ மின்னலைப் பிடிக்கிறாய் பயமில்லாமல்.. உன் கண்களுக்குள் இருக்கும் நான் பயத்தோடு துடித்துக் கொண்டிருக்கிறேன்

நான் மனதோடு ஒத்திகை பார்த்துக் கொண்டிருக்கிறேன்..
நீ தந்த வலிகள் இப்போதும்
பனிதுடைத்த மலராக இருக்கிறது.

உன்னிடம் ஒவ்வொரு முறையும் நான் தோற்றுப் போகிறேன் 
மவுனமே பதிலாக நீ தருகையில்...

நீ தந்த பரிசுப் பொருட்கள் ஒவ்வொரு நொடியும் 
நம்மை பேசாமல் பேசவைக்கின்றன.!

நீ செல்லும் பாதையோர மரங்களில்
உன் பெயர் சொல்லி அழைக்கும் குருவிகள் கிளிகள்....
நான்சென்றபோது மொட்டை மரமாகத்தான் இருக்கிறது.

என்னுடைய உடல் உறுப்பு தானம் உனக்காக உறுதி செய்துவிட்டேன். அப்போதும் 
கேலி செய்கிறாய் நீ கோமாளியாய் நான்.!

நீ தந்த துன்பங்களும் வலிகளும் மறந்த என் மனதிற்குள்..
ஆர்ப்பறிக்கிறாய் நீ ஆராதிக்கிறேன் நான்.

நீ வாசிக்கும் எழுத்துக்கள் உன்னையே பார்த்து ரசிக்கின்றன... என்னை காட்சிப்பிழை என்று ரசிக்க மறுத்தன.

கசலில் விழுந்தேன் உன்னை எடுக்க
மீன்கள் முத்துக்கள் சங்குகள் வந்தன.....என்னை எடுக்க...


...................          .............

ஆயுள்வரை அடிமையாய் போனாய்
அகலிகை போல்...
ராமனாய் வருகிறேன் சாபவிமோசனம் தீர்க்க...

பூ நடந்த சாலையிலே புன்னகையைத் தெளித்தாய்
நான் பறிக்கிறேன் பூக்களை மட்டும்.

உன் நாவின் நாட்டியத்திலும் உன் கண்களின் அபிநயத்திலும் உலகமே காத்துக் கிடக்கையில்...
கவியெழுதும் உன் காற் சிலம்பின் ஓசை மட்டும் மவுனமானதேன்?

வேடிக்கைப் பார்க்கவந்த இந்த வாலிபப் புறாவின் கனவில்...
மாளிகை கட்டி மகிழும் வேளையில் 
வேட்டையாடியது சாத்தியமா?

உன் பெயரை எழுதிப் பார்த்தேன் பேனா மை பயந்து எழுத மறுத்ததும் தட்டச்சில் பதிவு செய்ய அங்கேயும் எந்திரக் கோளாறு...
உலக மொழி மாநாட்டின் ஏற்பாட்டில் நான் எந்த மொழிக்கு உன் பெயரை பிரசுரிக்க சம்மதம்..

அது சரி ..காக்க வைப்பதில்தான்
உனக்கு எத்தனை பேரின்பம் வெளிவிடும் ஒவ்வொரு மூச்சினிலும்
மறு பிறவிஎடுக்கின்றேன்...
மவுனத்தை மட்டுமே நீ மொழிகையில்....

ஜெயராஜரெத்தினம்

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (30-Dec-15, 12:10 am)
பார்வை : 588

மேலே